நோய்கள் நீங்க லிங்க வழிபாடு

linga valipadu
- Advertisement -

எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும் ஆரோக்கியம் என்ற ஒரு செல்வம் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை தான் மிகவும் சிறப்பான வாழ்க்கையாக கருதப்படுகிறது. பணம் இல்லாதவர்கள் கூட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றால் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் அவர்களால் சம்பாதிக்க முடியும்.

இதே பணத்தை அதிக அளவில் வைத்துக்கொண்டு ஆரோக்கியம் இல்லை என்றால் அந்த பணத்தை அனுபவிக்க கூட அவர்களால் முடியாது. அவ்வளவு சிறப்பு மிகுந்த ஆரோக்கியத்தை பெறுவதற்கு எந்தவித நோய்களும் அணுகாமல் இருக்க வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த முறையில் லிங்க வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோயிலிருந்து வெளியில் வருவதற்காக மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஒரு குறிப்பிட்ட சூழலில் மருத்துவர் எங்களால் காப்பாற்ற முடியாது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி கைவிரிக்கும் நிலையும் இருக்கும். ஆக இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய மருத்துவராக திகழக்கூடியவர் தெய்வம்தான்.

தெய்வத்தின் அருளோடு நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதே சமயம் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உண்ணப்படும் மருந்துகள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருடைய வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையாக மாற்ற முடியும். இப்படி நோய்கள் நீங்குவதற்கு நாம் சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

சிவபெருமானின் வடிவமான லிங்க வடிவத்தை வைத்து நாம் வழிபடும் பொழுது நமக்கு இருக்கும் நோய்கள் நீங்கும். இந்த வழிபாட்டை நோய்கள் பாதிக்கப்பட்ட நபர் செய்ய வேண்டும். அவர்களால் செய்ய இயலாத பட்சத்தில் அவர்களுடைய ரத்த சம்பந்தம் உடைய நபர்கள் செய்யலாம். இந்த வழிபாட்டை மாலை ஆறு முப்பது மணிக்கு மேல்தான் செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பன்னீரை சிறிதளவு ஊற்றி பிள்ளையார் பிடிப்பது போல் சிவலிங்கம் பிடிக்க வேண்டும்.

இந்த சிவலிங்கத்தை கருப்பு வெற்றிலையின் காம்பை நீக்கிவிட்டு அதற்கு மேல் வைக்க வேண்டும். இதற்கு விபூதியால் பட்டை போட்டு அதற்கு மேல் குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சிவலிங்கத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையிலோ அல்லது வரவேற்புரையிலோ வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை நாம் செய்வதற்கு நமக்கு குங்குமம் தேவைப்படும். இந்த குங்குமத்தை நம்முடைய மோதிர விரல் மற்றும் கட்டைவிரலால் எடுத்து சிவலிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்யும் பொழுது

- Advertisement -

“ஓம் நீலகண்டாய வித்மஹே சித்ரப்பாய தீமஹி தந்நோ மயூர பிரஜோதயாத்”

என்னும் மந்திரத்தை கூற வேண்டும். 108 முறை அர்ச்சனை செய்த பிறகு ஊதுபத்தி காட்டிவிட்டு பச்சை கற்பூரத்தை ஏற்றி தீப ஆராதனை காட்ட வேண்டும். பிறகு நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டு வெற்றிலையுடன் அந்த மஞ்சள் லிங்கத்தை எடுத்து நோய் வாய் பட்டவர்களின் தலையை மூன்று முறை சுற்றி விட்டு அருகில் இருக்கக்கூடிய நீர்நிலையில் மஞ்சள் லிங்கத்தை கரைத்து விட வேண்டும்.

நீர்நிலைகள் இல்லாத பட்சத்தில் வேப்ப மரத்தின் வேர் பகுதியில் சிறிது தண்ணீரை ஊற்றி லிங்கத்தை கரைத்து விட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் மஞ்சள் லிங்கத்தை பிடித்து மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய விரைவிலேயே நோய்கள் முற்றிலும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக பெருமாள் வழிபாடு
முழு நம்பிக்கையுடன் செய்யக்கூடிய மஞ்சள் லிங்க வழிபாட்டை செய்பவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் நோய்களால் ஏற்பட்ட தாக்கம் குறைந்து முற்றிலும் நீங்கும்.

- Advertisement -