உதட்டிற்கு கீழ் மற்றும் மூக்கில் இருக்கும் சொரசொரப்பு தன்மை நீங்க, கரும்புள்ளிகள் மறைய எளிய டிப்ஸ் என்ன? இதை செய்தாலே ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

nose-chin-curd
- Advertisement -

சிலருக்கு முகம் முழுவதும் நன்றாக இருந்தாலும் மூக்கிற்கு மேலே கருப்பாக திட்டுக்களும், கரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் காணப்படும். சிலருக்கு சொரசொரப்பு தன்மையும் இருக்கும். குறிப்பாக மூக்கு இடுக்குகளில் எல்லாம் இது போல தொந்தரவுகள் இருப்பது உண்டு. அது மட்டும் அல்லாமல், உதட்டிற்கு கீழ் பகுதியிலும் இந்த பிரச்சனைகள் பலருக்கு தோன்றுவது உண்டு. இதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான எளிய அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

ஒருவருடைய முக அழகை அதிகரித்து காட்டுவது அவர்களுடைய மூக்கு மற்றும் தலைமுடி ஆகும். மூக்கு எடுப்பாக இருந்தால் முகமும் அழகாக இருக்கும் என்பார்கள். அந்த வகையில் ஒருவருடைய மூக்கில் ஏற்படும் சின்ன விஷயமும் பெரிதாக காண்பிக்கும். உதாரணத்திற்கு மூக்கின் மீது சிலருக்கு கருப்பு கோடுகள் இருக்கும். இது போல இருந்தால் அது மட்டும் தனியாக முகத்தில் பளிச்சின்னு தெரியும். இது நம்முடைய முக அழகை மொத்தமாகவே கெடுத்து விடும்.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் முகத்தின் மீது கவனம் செலுத்துபவர்கள் மூக்கு மற்றும் உதடுக்கு கீழ் இருக்கும் பகுதிகளை அவ்வளவாக பராமரிப்பது கிடையாது. இதனால் அந்த இடங்களில் நீர் குமிழிகள், வெண் புள்ளிகள் தோன்றுவது உண்டு. அதை உடைத்து விட்டால் முகம் முழுவதும் பரவி விடும் அபாயமும் உண்டு எனவே இதை எளிதான முறையில் எப்படி நீக்கி மூக்கின் சொரசொரப்பிலிருந்து பாதுகாப்பது?

முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் புளிப்பாக இருக்கக் கூடாது. புளிக்காத ஒரு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். முகத்திற்கு பூசும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் நான்கைந்து சொட்டுக்கள் எலுமிச்சை சாறு விட்டுக் கொள்ளுங்கள். மேலும் ஏலக்காய் அளவிற்கு கோல்கேட் டூத் பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். இது விரைவாக பணி புரிந்து நம்முடைய மூக்கை சொரசொரப்பிலிருந்து மீட்டு எடுக்கும் ஒரு அற்புத பொருளாக இருக்கிறது.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் கால் ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதை ஒரு பேஸ்ட் போல நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் மூக்கின் இடுக்கில் இருந்து ஆரம்பித்து மூக்கு மேல் பகுதி முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அதே போல உதட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளிலும் தடவிக் கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சமையல் கட்டில் தக்காளி நறுக்கும் போது இதை செஞ்சா கூட ஹீரோயின் மாதிரி நீங்களும் பளபளன்னு இருக்கலாமே! 10 பைசா செலவில்லை ஆனால் என்றும் 16 போல முகமா?

அதன் பின்பு நன்கு உலர்ந்ததும் துடைத்து எடுத்து விடுங்கள். இது போல நீங்கள் தினமும் ஏழு நாள் செய்து வாருங்கள், எட்டாவது நாள் உங்களுடைய மூக்கில் சொரசொரப்பு தன்மை நீங்கி, நல்ல ஒரு ஷைனிங்கான பளபளப்பு தன்மை கிடைக்கும். உதட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளிலும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் எதுவும் தோன்றாது. இது போல வாரம் ஒரு முறையாவது செய்து வர, மீண்டும் அந்த இடம் சொரசொரப்பாக மாறாமல் தடுக்கும்.

- Advertisement -