உங்கள் தொழில் தொடர் நஷ்டத்தை சந்திக்கிறதா? இந்த ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் போதும். நஷ்டத்திற்கு இரு மடங்காக லாபம் குவியும்.

business numerology in Tamil
- Advertisement -

தற்காலத்தில் பலரும் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று ஆசை படுவதுண்டு. அதில் சிலர் தொழில் தொடங்கி வெற்றியும் பெறுவர். ஆனால் வேறு சிலர் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்து அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் தவிப்பர். இதற்க்கு மிக முக்கிய காரணம் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற சரியான பெயரை வைக்காததே என்று எண்கணிதம் கூறுகிறது.

பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது நாம் அந்த குழந்தை பிறந்த நேரத்தை பொறுத்து ராசி நட்சத்திரம் பார்த்து தான் பெயர் வைப்போம். அதேபோல்தான் ஒரு தொழிலை நாம் தொடங்குவதற்கு முன்பாக அந்த தொழிலுக்குரிய கிரகத்தின் கூட்டு எண்ணில் பெயர் வைப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அந்த வகையில் எந்த தொழிலுக்கு எந்த கூட்டு எண்ணில் பெயர் வைக்கலாம் (Business name numerology in Tamil) என்று இப்போது பார்ப்போம்.

- Advertisement -

தொழில்களும் அதற்குரிய கூட்டு எண்களும்:
அரசாங்கத்தில் கான்ட்ராக்ட் எடுத்து நடத்துபவர்கள் சூரியனின் ஆதிக்கத்திற்குரிய கூட்டு எண் ஆன 1ல் தங்கள் தொழிலின் பெயரை வைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி தொழிலை செய்பவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய கூட்டு எண்ணான இரண்டு வரும் படி பெயரை வைக்க வேண்டும். பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், டிரேடிங் செய்பவர்கள், மேனேஜ்மென்ட் தொழிலில் ஈடுபடுபவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான மூன்றில் பெயரை வைக்க வேண்டும்.

பெட்ரோல் பங்க் நடத்துபவர்கள், வாசனை திரவியங்கள், கெமிக்கல், எலக்ட்ரானிக் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் ராகுவின் ஆதிக்க எண்ணான நான்கில் பெயரை வைக்க வேண்டும். படிப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் மற்றும் ஐடி துறை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதனின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான ஐந்தில் பெயரை வைக்க வேண்டும்.

- Advertisement -

திரையரங்கம், பாத்திரக்கடை, அழகு சாதன பொருட்கள் விற்கும் நிலையம் இவற்றை வைத்திருப்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்க எண்ணான ஆறின் பெயரை வைக்க வேண்டும். டிபார்ட்மென்டல் ஸ்டோர், எலக்ட்ரானிக், பஜார் வைத்திருப்பவர்கள், மருந்தகம் வைத்திருப்பவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்குரிய ஏழில் பெயரை வைக்க வேண்டும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலை செய்பவர்கள், புத்தகம் விற்கும் நிலையம் வைத்திருப்பவர்கள், பழைய பொருட்களை வாங்கும் கடைகள் வைத்திருப்பவர்கள் சனியின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான எட்டில் பெயரை வைக்க வேண்டும்.

சமையல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையான செக்யூரிட்டி ஏஜென்சி வைத்திருப்பவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான ஒன்பதில் பெயரை வைக்க வேண்டும். தாங்கள் செய்யும் தொழிலுக்கு உரிய கிரகத்தின் ஆதிக்க எண்ணை கூட்டு எண்ணாக கொண்ட பெயர்களை வைப்பதன் மூலம் நவக்கிரகங்களின் அருள் நமக்கு கிடைத்து, தொழிலில் மேலும் மேலும் பன்மடங்கு லாபங்களை பெறலாம்.

- Advertisement -