இந்த சூப்பை குடித்தால் 40 வயதை தாண்டினாலும் மூட்டு வலி வராதாம். ஆட்டுக்கால் சூப்புக்கு இணையான சத்து இந்த சூப்பிலும் இருக்குது.

soup
- Advertisement -

நிறைய பேர் இதை நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஆனால், இது உண்மை. வெண்டைக்காயில் சூப்பு வைத்து குடித்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. எலும்புகள் தேய்மானம் ஆகாது. காரணம் வெண்டைக்காயில் அந்த பிசுபிசுப்பு தன்மை இருக்குது அல்லவா அது நம்முடைய எலும்பை பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சூப்பை வாரத்தில் ஒரு நாள் வைத்து குடித்து வந்தால் வயதான பின்பும் நமக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராது. ஆகவே வாரத்தில் ஒரு நாள் பெரியவர்களும் இதை குடிக்கலாம். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். வாங்க அந்த வெண்டைக்காய் சூப் ரெசிபி எப்படி செய்வது என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 5 லிருந்து 6 பிஞ்சு வெண்டைக்காய்களை எடுத்து சுத்தமாக கழுவி விட்டு, சாம்பாருக்கு நறுக்குவது போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெறும் கடாயில் இந்த வெண்டைக்காய்களை போட்டு இரண்டு மூன்று நிமிடம் வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 1, கிராம்பு 1, சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், போட்டு வதக்குங்கள். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் போட்டு, நன்றாக வதக்கி, நன்றாக இடித்த இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், போட்டு மீண்டும் வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாடை நீங்கியவுடன் ஒரு சின்ன தக்காளி பழத்தை நறுக்கி போட்டு, கூடவே கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு, இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி விடுங்கள்.

தக்காளி லேசாக வதங்கியவுடன், சூப்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பை போட்டு, இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை இந்த தண்ணீரில் போட்டு, ஒரு மூடி போட்டு மீண்டும் சூப்பை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வெண்டைக்காயில் இருக்கும் சத்து அனைத்தும் அந்த தண்ணீரில் இருங்கட்டும். 5 நிமிடத்தில் இருந்து ஏழு நிமிடங்கள் இந்த சூப்பை கொதிக்க வைத்து, இறுதியாக கரம் மசாலா 1/4 ஸ்பூன், பெப்பர் 1/4 ஸ்பூன், மல்லித்தழை தூவி, அடுப்பை அணைத்து சுடச்சுட இந்த சூப்பை குடித்தால் சுவையும் நன்றாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியமும் சூப்பராக இருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மறக்காமல் இதை குடிச்சிடுங்க.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைலில் பூரியை நல்லா புசுபுசுன்னு எண்ணெயை குடிக்காம சூப்பரா சுட இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ண போதும். காலையில சுட்ட பூரி நைட்டு வரைக்கும் கூட அப்படியே புசுபுசுன்னு இருக்கும்.

பின்குறிப்பு: இதில் ஒரு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட டிப்ஸையும் போனஸாக நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மேலே சொன்னபடி சூப் வைக்கும் போது, அதில் இலசான வெண்டைக்காய்க்கு பதில், முற்றிய வெண்டை காய்களை போட்டு சூப் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு இருக்கும் நீண்ட நாள் சளி பிரச்சனையும் சரியாகும். (முற்றிய வெண்டைக்காயை சாப்பிட முடியாது. சூப்பில் இருக்கும் வெண்டை காய்களை எடுத்து விட்டு வெறும் சூப்பை மட்டும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம்.) முத்திய வெண்டை காய்களுக்கு நாள்பட்ட சளியை நீக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -