ஒல்லிக்குச்சியா இருக்கும் உங்கள் பின்னலை 3 மடங்கு அடர்த்தியாக மாற்ற, இந்த 3 இலைகளை சேர்த்து ஹேர் பேக் போடுங்க போதும்.

hair6
- Advertisement -

சில பேருடைய முடியை மூன்று கால்களாகப் பிரித்து பின்னல் கூட போட முடியாது. ஒரே ஒரு குதிரைவால் போட்டுக்கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அடர்த்தியான பின்னல் பின்னி கொள்ள வேண்டும் என்றால் ரொம்ப இஷ்டமாக இருக்கும். ஆனால், தலைமுடியை போஷாக்காக அடர்த்தியாக எப்படி வளர்ப்பது என்று தெரியாது. இதற்கு ஒரு எளிமையான அழகு குறிப்பு வீட்டில் இருந்தபடியே நாம் பின்பற்றலாம். இதை வாரத்தில் ஒரு நாள் பின்பற்றி வந்தாலே உங்களுடைய ஒல்லிக்குச்சி முடி மூன்று மடங்கு அடர்த்தியாக மாறும். பிறகு அழகாக பின்னி பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம். வாங்க அந்த எளிமையான அழகு குறிப்பு என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

ஒல்லிக்குச்சி முடிக்கு போஷாக்கு தரும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக் போட நமக்கு கருவேப்பிலை, முருங்கைக்கீரை, செம்பருத்தி இலை, இந்த மூன்று இலைகள் தேவை. இந்த மூன்று இலைகளுக்கு லேசாக கொழகொழப்பை கொடுப்பதற்கு நாம் ஒரு பொருளை சேர்க்க வேண்டும். வெந்தயம் உங்கள் தலைக்கு சேரும் என்றால், வெந்தயத்தை ஊற வைத்து இதில் சேர்த்து அரைக்கலாம்.

- Advertisement -

வெந்தயம் தலைக்கு தேய்த்தால் சளி பிடிக்கும் சைனஸ் பிரச்சனை உள்ளது என்றால், நல்ல பழுத்த வாழைப்பழம் தோல் உரித்து இதோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். (உங்களுக்கு தலையில் பேன் பொடுகு அரிப்பு இன்பெக்சன் இருந்தால் இதோடு இரண்டு கொத்து வேப்பிலைகளையும் சேர்த்து நீங்கள் அரைத்துக் கொள்ளலாம்).

முதலில் மூன்று இலைகளையும் சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். கருவேப்பிலை 1 கைப்பிடி, முருங்கைக்கீரை 1 கைப்பிடி, செம்பருத்தி இலை 1 கைப்பிடி, கழுவிய இலைகளை மிக்ஸி ஜாரில் போடுங்கள். வாழைப்பழமாக இருந்தால் பழுத்த வாழைப்பழத்தை தோல் உரித்து விட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு அரைத்தால் சூப்பரான பேக் கிடைக்கும். (வெந்தயமாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்துவிட்டு ஊற வைத்த தண்ணீரோடு வெந்தயத்தை இதில் சேர்த்து அரைக்கவும்)

- Advertisement -

தேவைப்பட்டால் இந்த பேக்கை மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி கொஞ்சம் சிரமப்பட்டு வடிகட்டி திப்பியை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மொழு மொழு பேக்கை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் சிக்கு எடுத்து எண்ணெய் வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த பேக்கை வேர்க்கால்களில் இருந்து நுனி மூடி வரை அப்ளை செய்துவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டால் போதும் முடி உதிர்வு குறையும். முடிக்கு தேவையான போசாக்கு கிடைக்கும். முடி அடர்த்தியாக கடகடவென வளர தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: செலவே இல்லாம உங்க முடியை ஸ்மூத்தா ஷைனா வச்சுக்க ட்ரெண்டிஙான ஐடியாவில் இதுவும் ஒன்று. படிச்சு பாருங்க. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க.

வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக் போடுங்க.  கூடவே சேர்த்து கட்டாயம் பின் சொல்லக்கூடிய பொருட்களையும் மாற்றி மாற்றி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கை கீரை, கருவேப்பிலை, வாழவைப்பழம், பேரிச்சம்பழம், வெல்லம், சேர்த்த உணவு பொருட்கள், பாதாம் பருப்பு, கீரை வகைகள், காய்கறிகள், என்று உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களையும் நிறைய சாப்பிட வேண்டும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஹேர் பேக்கோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொண்டால் உங்களுடைய முடி வளர்ச்சி மூன்று மடங்கு நிச்சயம் அதிகரிக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -