ஆந்திரா ஸ்பெஷல் ‘கார வெங்காய பஜ்ஜி’ சாதாரண பஜ்ஜி போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் 10 நிமிடத்தில் எப்படி சுடுவது?

- Advertisement -

ஆந்திரா என்றாலே காரத்திற்கு பெயர் போன ஊராகும். ஊறுகாய் முதல் பஜ்ஜி வரை அத்தனையுமே காரசாரமாக நாவில் ஜலம் ஊற வைக்கும் அட்டகாசமான சுவையில் செய்வது அவர்களுடைய தனி பெருமையாக இருந்து வருகிறது. இப்போது இருக்கும் லாக் டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் எதையாவது செய்து சாப்பிட்டு கொண்டே இருப்போம். அந்த வகையில் பத்தே நிமிடத்தில் சட்டென வித்தியாசமான சுவையில் கார வெங்காய பஜ்ஜி எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

onion

பஜ்ஜி என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது வாழைக்காய் தான். வாழைக்காய் மட்டுமல்ல! உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றைக் கொண்டும் செய்வது வழக்கம். ஆனால் அப்பளம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை கொண்டும் இந்த பஜ்ஜி செய்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையுடன் புது விதமாகவும் இருக்கும். சரி இப்போது நாம் ஆந்திரா ஸ்பெஷல் கார வெங்காய பஜ்ஜி சுட போவோம் வாருங்கள்.

- Advertisement -

கார வெங்காய பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 200 கிராம்
மிளகாய்த் தூள் – காரத்திற்கு ஏற்ப
சோடா உப்பு – ஒரு சிட்டிகை அளவு
கேசரி கலர் – சிட்டிகை அளவு

bajji4

காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – இரண்டு பற்கள்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 3

- Advertisement -

கார வெங்காய பஜ்ஜி செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயத்தை தோல் உரித்து வட்ட வட்டமாக மெல்லியதாக அரிந்து கொள்ள வேண்டும். வெங்காய பஜ்ஜியை பொறுத்தவரை மாவு சரியாக ஒட்ட செய்யாது. எனவே ஒரு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தேவையான மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

bajji3

கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை மற்றும் சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடலை மாவுடன் தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கேசரி கலர் சேர்க்கலாம் அல்லது தேவை இல்லை என்று நினைப்பவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

bajji2

பின்னர் மேலே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்தவற்றை இதனுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும். சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து உள்ளதால் பஜ்ஜி ஆரோக்கியம் மிகுந்ததாகவும் நிச்சயம் இருக்கும். சாதாரண பஜ்ஜியை போல் அல்லாமல் கூடுதல் சுவையுடன், வித்தியாசமாகவும் நீங்கள் இதுவரை சுவைக்காத சுவையுடன் இருக்கும்.

bajji5

அரைமணி நேரம் கழித்த பின் ஃப்ரிட்ஜில் இருந்து வெங்காயம் எடுத்து வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கொதித்த பின் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு வெங்காயத்தையும் எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ஆந்திரா ஸ்பெஷல் கார வெங்காய பஜ்ஜி பத்து நிமிடத்தில் தயாராகி விடும். பிரிட்ஜில் வைத்து எடுப்பதால் மாவு வெங்காயத்துடன் நன்கு ஒட்டி பார்ப்பதற்கே அழகான வடிவத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -