வெங்காய சட்னி இப்படியும் 5 நிமிடத்தில் ஈஸியாக செய்யலாமே!

vengaya-chutney
- Advertisement -

தினமும் என்னடா சட்னி செய்வது? என்று புலம்பிக் கொண்டிருக்க தேவையில்லை! வகைவகையாக சட்னி வகைகளுக்கு பஞ்சமே இல்லை என்று கூறும் அளவிற்கு இருக்கிறது இங்கு! தக்காளி சட்னி என்று எடுத்துக் கொண்டால் அதில் 10 வகைகள் இருக்கும். அந்த வகையில் வெங்காய சட்னியை இப்படி ஈசியாக அரைத்துப் பாருங்கள், சுவையும் அட்டகாசமாக இருக்கும். அவசர தேவைக்கு 2 வெங்காயம் இருந்தால் போதும்! சட்டென இந்த சட்னியை வைத்து விடலாம். அதை எப்படி வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

onion-cutting

‘வெங்காய சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் 2, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், பூண்டு – இரண்டு பற்கள், சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு, உப்பு தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

‘வெங்காய சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக அல்லாமல் கொஞ்சம் பெரிது பெரிதாகவே நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள். கடலைப்பருப்பு பொரிந்து வந்ததும் அதில் தனியா ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் வெந்தயத்தை கால் டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து மூன்றையும் நன்கு பொன் நிறமாக மாறி வாசம் வரும் வரை வதக்குங்கள்.

onion-thokku2

பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அப்படியே ஆற வைத்து விடுங்கள். அதே வாணலியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வதக்குங்கள். கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். வெங்காயம் ஆறியதும் அதனையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை ஓட்டி இரண்டு சுற்று சுற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதுடன் தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்களை தாளித்து சேர்க்க வேண்டும். அதற்கு அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்னர் இரண்டு பூண்டு பற்களை தோலுடன் அப்படியே நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தாளிப்பு அடங்கியதும் அடுப்பை அணைத்து சட்னியில் கொட்டவும். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமா கம்மியான பொருட்களை வைத்தே சட்டென அவசர காலத்தில் செய்யக்கூடிய இந்த வெங்காய சட்னி நீங்களும் செய்து பாருங்கள்.

onion-thokku3

வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பாதி அளவிற்கு காய்ந்த மிளகாய்களை நீக்கி அதற்கு பதிலாக காஷ்மீரி மிளகாய் சேர்த்தால் நிறம் அட்டகாசமாக இருக்கும். தனியா, வெந்தயம் எல்லாம் சேர்த்து செய்வதால் மற்ற சட்னி வகைகளை விட இது இன்னும் வித்தியாசமான சுவையில் இருக்கும் என்பது நிச்சயம். நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து வீட்டில் இருக்கும் வரை அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -