புதிதாக வாங்கி வந்த பூ செடி போதும், போதும் என்கிற அளவுக்கு பூத்துக் குலுங்க வேண்டுமா? இதோ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. பூத்துக்குலுங்கும் பூக்களை பறிக்கவே உங்களுக்கு நேரம் போதாது.

- Advertisement -

செடி வளர்க்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் அந்த ஆசை காணாமல் போய்விடும். காரணம் நாம் கார்டனிலிருந்து வாங்கி வந்து வைத்து என்ன தான் பராமரித்தாலும் வாங்கி வரும் போது இருப்பதைப் போல் நம் வீட்டில் செடிகள் அவ்வளவு எளிதில் பூத்து விடாது. சில நேரங்களில் மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்றுவிடும். இல்லையென்றால் செடி பட்டு போய்விடும். வாங்கி வந்து இப்படி பட்டு போவதை பார்க்க மனமில்லாமல் பல நேரங்களில் நாம் செடி வளர்க்கும் ஆசையை விட்டு விடுவோம். இனி அப்படி எதுவும் நீங்கள் பீல் பண்ண தேவையில்லை. கார்டனில் இருந்ததை விட உங்கள் வீட்டிற்கு வந்த பிறகு இந்த செடிகள் அதிக அளவில் பூத்து குலுங்க இதோ இந்த ஒரு டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணா போதும். வாங்க அது என்ன டிப்ஸ் என்று தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் ஒரு மூடி போட்டு பிளாஸ்டிக் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்து வாழைப்பழத் தோள்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு நீளமான கற்றாழை மடலை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் அதில் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

கற்றாழையை அலசி வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிரஷாக பறித்த கற்றாழை மடலாக இருக்க வேண்டும். கற்றாழை ஜெல் கடைகளில் வாங்கியதை உபயோகிக்க கூடாது. அடுத்ததாக நீங்கள் உங்கள் வீட்டில் காபி போட பயன்படுத்தும் எந்த இன்ஸ்டன்ட் காபித்தூளாக இருந்தாலும் பரவாயில்லை அதில் ஒரு டீஸ்பூன், காபித்தூள் இல்லை என்றால் நீங்கள் டீ போட்ட பிறகு கிடைக்கும் அந்த டீ தூள் சக்கையை கூட இதற்கு பயன்படுத்தலாம். கடைசியாக இதில் சேர்க்க வேண்டியது தேன் இரண்டு டீஸ்பூன் நல்ல சுத்தமான தேனை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் சேர்த்த பிறகு ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி டப்பாவை மூடி போட்டு எடுத்து வைத்து விடுங்கள்.

இதில் சேர்க்கப்படும் வாழைப்பழத் தோல், தேன், கற்றாழை, இவை அனைத்துமே செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து செடி நன்றாக வளர பெரிதும் உதவி செய்யும் புதிதாக வாங்கும் ஒரு செடியை கற்றாழை ஜல்லில் தடவி நட்டு வைத்தாலே போதும். இந்த ஜெல் பட்டு வேர் ஸ்ட்ராங்காக மாறிவிடும். வாழைப்பழத்தோலில் செடி வளர்வதற்கான ஊட்டச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

- Advertisement -

தேன் ஊற்றுவதால் செடியில் பூச்சி எறும்பு போன்றவை வரும் என்ற கவலை வேண்டாம். ஏன்னெனில் இதை ஊற்றி நாம் உடனே செடிகளுக்கு ஊற்ற போவதில்லை. இப்படி இந்த டப்பாவில் இதை சேர்த்து ஒரு நான்கு நாட்கள் வரை மூடி போட்டு வைத்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.அதற்குள்ளே இந்த தண்ணீர் நன்றாக புளித்து விடும். அப்போது தேனில் உள்ள இனிப்பு சுவை மாறி வெறும் மருத்துவ குணங்கள் மட்டுமே இருக்கும்.

இப்படி நான்கு நாட்கள் வரை வைத்து எடுத்த இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் அந்த பழைய பழ தோல் போன்றவைகளை தூக்கிப் போட வேண்டாம். மறுபடியும் அதில் தண்ணீர் ஊற்றி வெறும் தேன் மட்டும் கலந்து இதே போல் இரண்டு மூன்று நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். இப்படி வடிகட்டி எடுத்த தண்ணீருடன் ஒரு லிட்டர் தண்ணிக்கு 5 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் செடிகளுக்கு ஊற்றி வாருங்கள்.

- Advertisement -

இது தண்ணீரை ஊற்றும்போது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றிய உடனே இதை ஊற்றக்கூடாது. மண் காய்ந்த நிலையில் இருக்கும் போது இந்த தண்ணீரை ஊற்றி இதன் பிறகு நீங்கள் தண்ணீர் ஊற்றலாம். அப்போது தான் நீங்கள்ஊற்றும் இந்த தண்ணீர் கீழே வடிந்து வீணாகாமல் செடியின் வேர்களுக்கு சென்று நல்ல படியாக உங்கள் செடி வளர்ந்து, புதிதாக பூக்கள் பூக்க தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 4 மா இலைகள் இருந்தால் போதும். 4 மாமரத்தையே உருவாக்கி விடலாம். அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா?

இந்த முறையில் இனி நீங்கள் வாங்கி வரும் பூச்செடிகளை வளர்க்கத் தொடங்குங்கள். பிறகு நீங்களே சொல்வீர்கள் இதில் பூக்கும் பூக்களை பறித்து மாளவில்லை என்று அந்த அளவிற்கு இதில் பூக்கள் பூக்கும்.

- Advertisement -