ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்? | Ounce Meaning in Tamil

Ounce Meaning in Tamil
- Advertisement -

ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்? 1 cup = how many ounces in Tamil

சில வியாபார இடங்களில், சில வகை பொருட்களை அளப்பதற்கு அவுன்ஸ் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதை நாம் கேட்டிருப்போம். இந்த அவுன்ஸ் என்றால் என்ன? இந்த அவுன்ஸ் அளவீட்டை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? போன்ற பல தகவல்களை இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அவுன்ஸ் என்றால் என்ன?

அவுன்ஸ் முறை என்பது பண்டைய கால மெட்ரிக் அலகு அளவீட்டு முறையை சாராத ஒரு எடை கணக்காகும். உலகில் முதன் முதலாக இந்த அவுன்ஸ் அளவீட்டு முறை கிறிஸ்தவ சகாப்த 5 ஆம் நூற்றாண்டில் ரோமானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. ரோமானிய ஆட்சிக்காலத்தில் ஒரு அவுன்ஸ் என்பது 27.35 கிராம்கள் என வரையறை செய்யப்பட்டது.

- Advertisement -

இருபதாம் நூற்றாண்டின் சில வருடங்கள் வரை இந்த அவுன்ஸ் அளவீட்டு முறை இங்கிலாந்து நாட்டிலும் அதன் ஆங்கிலேய ஆதிக்கம் நிறைந்த காலனி நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஐக்கிய மாகாண அமெரிக்க நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவீட்டு முறை பயன்பாட்டில் இல்லை.

அவுன்ஸ் அளவீடு வகை

  1. அவேதுபாய்ஸ் அவுன்ஸ்
  2. ட்ராய் அவுன்ஸ்
  3. மெட்ரிக் அவுன்ஸ்
  4. அப்போதிகர்ஸ் அவுன்ஸ்
  5. மரிய தெரசா அவுன்ஸ்
  6. ஸ்பானிஷ் அவுன்ஸ்
  7. டவர் அவுன்ஸ்

இந்தப் பட்டியலில் முதல் மூன்று அவுன்ஸ் கணக்கீடு முறை மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன.
அவேதுபாய்ஸ் அவுன்ஸ்
1959ஆம் ஆண்டு ஐக்கிய மாகாண அமெரிக்க நாடும், காமன்வெல்த் நாடுகளும் இந்த அவேதுபாய்ஸ் அவுன்ஸ் அளவை நிர்ணயம் செய்தன. அதன்படி ஒரு அவெதுபாய்ஸ் அவுன்ஸ் என்பது 28.349523125 கிராம்கள் எனவும், தானிய அளவில் 437.5 Grains எனும் தானிய அளவில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவேதுபாய்ஸ் அவுன்ஸ் அளவு தற்போது அமெரிக்க நாட்டில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

- Advertisement -

டிராய் அவுன்ஸ்
Ounce Meaning in Tamil: டிராய் அவுன்ஸ் என்பது பொதுவாக “தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பலேடியம், ரோடியம்” போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்களையும் தங்க பிஸ்கட்டுகளை எடை போடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

1 ட்ராய் அவுன்ஸ் = 31.1034768 கிராம்கள்
1 ட்ராய் அவுன்ஸ் = 480 grains தானிய அளவு

- Advertisement -

மெட்ரிக் அவுன்ஸ்
இந்த மெட்ரிக் அவுன்ஸ் என்பது ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 1 மெட்ரிக் அவுன்ஸ் என்பது 28.35 கிராம்கள் ஆகும்.

ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?

1 கப் = 8 அவுன்ஸ்கள்

இதையும் படிக்கலாமே: ரிப் மீனிங் இன் தமிழ்

வரலாறு ரீதியில் பார்க்கும் போது இந்த அவுன்ஸ் கணக்கு பல்வேறு நாடுகளில், பல்வேறு அளவுகளில் வரையறுக்கப்பட்டன. அவை என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Ounce Meaning in Tamil

அவுன்ஸ் வகைகள்கிராம் அளவுகள்
அவெதுப்பாய் அவுன்ஸ் 28.349523125 (437.5 grains)
ட்ராய் அவுன்ஸ் 31.1034768 (480 grains)
மரிய தெரசா அவுன்ஸ் 28.0668 (433.136915 grains)
ஸ்பானிஷ் அவுன்ஸ் 28.75
பிரஞ்ச் பேன்ஸ்
30.59
போர்ச்சுகீஸ் அவுன்ஸ் 28.69
இட்டாலியன் அவுன்ஸ் 27.4
டச் மெட்ரிக் அவுன்ஸ் 100
சைனீஸ் மெட்ரிக் அவுன்ஸ் 50
இங்கிலீஷ் டவுன்ஸ் அவுன்ஸ் 29.16 (450 grains)
- Advertisement -