RIP full form in Tamil | RIP தமிழ் அர்த்தம்

RIP full form in Tamil
- Advertisement -

RIP meaning in Tamil – RIP தமிழ் விரிவாக்கம்

தற்காலத்தில் பலரும் “RIP” என்கிற வார்த்தையை யாராவது ஒரு நபர் இறக்கும் பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பார்த்திருப்போம். குறிப்பாக சமுக வலைத்தளங்களில் இந்த RIP அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறை தோட்டங்களில், அதிலும் குறிப்பாக இறந்த கிறிஸ்தவ மதத்தினர் அடக்கம் செய்யப்பட்ட, கல்லறைகளில் இந்த R.I.P என்கிற வார்த்தை இடம் பெற்றிருக்கும். RIP என்றால் என்ன? (RIP full form in Tamil) அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

RIP meaning in Tamil

RIP full form in Tamil

RIP – Rest In Peace  = இறைவனிடத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் (அ) ஆத்மா சாந்தியடையட்டும்

- Advertisement -

R.I.P என்கிற ஆங்கில வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் “Rest In Peace” என்பதாகும். கிறிஸ்தவ மத நம்பிக்கையில் இறந்த நபரின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யபட்டாலும், இறந்த அந்த நபர்கள் இறைவனின் அருட்கடாட்ச பேரருளில் நிரந்தர நித்திரை செய்வதாக கிறிஸ்தவ மதத்தில் நம்பப்படுகிறது.

Rest in peace meaning in Tamil

பொதுவாக நித்திரை எனும் தூக்கம் என்பது உடலுக்கும், மனதிற்கும் மனிதர்கள் கொடுக்கின்ற ஓய்வாகும். அந்த வகையில் இறந்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் இறைவனிடத்தில் ஓய்வெடுப்பதாக கருதப்பட்டு பயன்படுத்தும் வார்த்தை தான் “Rest In Peace” என்பதாகும் (Rip meaning in tamil death). இந்த வார்த்தைகளின் சுருக்கம் தான் RIP

- Advertisement -

Rip endral enna

இந்த ஆங்கில வார்த்தைகள் இறந்த கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர்களின் கல்லறை நினைவு தூண்களில் குறிக்கப்படும். இந்த வார்த்தைகளை தற்போது அனைவரும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். யாராவது ஒருவர் இறந்தால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த R.I.P வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

 

- Advertisement -