ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை பாரம்பரிய முறையில் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது எப்படி? இப்படி ஒருமுறை செஞ்சா அடிக்கடி கேட்பாங்க பாருங்க!

paal-kozhukattai_tamil
- Advertisement -

பால் கொழுக்கட்டை என்றாலே நமக்கு பாரம்பரியம் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த காலம் முதல் இந்த காலம் வரை விசேஷம், விழா என்றால் உடனே வீட்டில் பால் கொழுக்கட்டை, பால் பாயாசம் போன்றவற்றை செய்து அசத்துவது உண்டு. அந்த வகையில் பாரம்பரிய மணம் மாறாமல் பால் கொழுக்கட்டை ரெசிபி எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப், நெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, பால் – ஒரு கப், துருவிய தேங்காய் – அரை கப், நாட்டு சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – முக்கால் கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

பால் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் அரிசி மாவு ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கட்டிகள் இல்லாமல் எல்லா இடத்திலும் படும்படி கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம் போல உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்பு சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிசைந்து எடுத்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு கோலிகுண்டு அளவிற்கு இருக்குமாறு ஒவ்வொரு உருண்டைகளையும் உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். முக்கால்கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு கப் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். நாட்டு சர்க்கரைக்கு பதிலாக சிலர் வெல்லம் சேர்த்தும் செய்வது உண்டு.

- Advertisement -

நாட்டு சர்க்கரை கரைந்து பாகு மாதிரி வந்ததும், நீங்கள் உருட்டி எடுத்துள்ள உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் நன்கு கொதித்த பிறகு, ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆறின பாலை சேர்க்கலாம். பின்னர் இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து, கால் ஸ்பூன் ஏலக்காய் தூள் தூவி, சிறிதளவு நெய் விட்டு நன்கு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
10 நிமிடத்தில் சூப்பரான முட்டைக்கோஸ் பக்கோடா இப்படி செய்ய முடியும்னா எதுக்கு வேற எதையாவது தேடனும்? குழந்தைகள் கேட்டால் உடனே ரெடி பண்ணி கொடுக்கலாமே!

மீண்டும் ஒரு கொதி நன்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். நாட்டு சர்க்கரையில் செய்யும் பொழுது இந்த பால் கொழுக்கட்டை பாரம்பரிய வாசம் மாறாமல் ரொம்பவே சுவையாக இருக்கும். மேலும் கெட்டியாக இது போல திக்காக செய்யும் பொழுது சுவையும் ரொம்பவே சூப்பராக இருக்கும். அன்று முதல் இன்று வரை அனைவரும் விரும்பக் கூடிய இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி பாரம்பரிய மணம் மாறாமல் நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் எளிதாக செய்து பாருங்கள். நீங்களே விரும்பி அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீங்க!

- Advertisement -