உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுவையான பச்சைப்பயறு கடையல். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். மணமணக்கும் வாசத்துடன் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்

pachchai
- Advertisement -

இதுவரை சாம்பார் வைப்பதற்கும், கூட்டு செய்வதற்கும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை தான் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இவற்றை விட உடலுக்கு மிகவும் அதிகமான ஆரோக்கியம் கொடுக்கும் பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு வகையை பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம். பச்சைப் பயிரை வேக வைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டோம் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பச்சைப் பருப்பு கடையலை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

pudalangai-koottu1

தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 6, தக்காளி – 1, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 4, தனியா – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 100 கிராம் பச்சை பருப்பை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள பச்சை பயிறை இதனுடன் சேர்த்து 5 விசில் வரும்வரை குக்கரை மூடி வேக வைக்க வேண்டும்.

pacha

பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாய் ஒவ்வொன்றையும் இரண்டாக கீறி வைத்துக்கொண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் தனியாகவே சிறிய உரலில் வைத்து கொர கொரப்பாக இருக்குமாறு இடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும், பிறகு பூண்டை உரலில் வைத்து இடித்து சேர்க்கவேண்டும். அதன் பிறகு சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

pachaipayaru1

பிறகு இடித்து வைத்துள்ள தனியாதூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு, வதக்கிய இந்த பொருட்களை பச்சை பயறுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு பருப்பு கடையும் மத்தைப் பயன்படுத்தி இவற்றை நன்றாக கடைந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பச்சைப்பயறு கடையல் தயாராகிவிட்டது.

- Advertisement -