ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பச்சை பயரை வைத்து இப்படி ஒரு முறை வடை செய்து பாருங்கள். ஆரோக்கியமான, சுவையான வடையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்.

pachaipayaru vadai
- Advertisement -

நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளில் வடை என்பது அனைத்து வகையான விருந்திலும் இருக்கும். ஆரோக்கியமான சிற்றுண்டி என்று பார்க்கும் பொழுது முதல் இடத்தில் இருப்பது வரை தான். இன்றளவும் பல பேர் தங்களுடைய காலை மற்றும் மாலை தேனீயுடன் வடையை சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். கடலைப்பருப்பை வைத்து வடை செய்வார்கள். அதேபோல் உளுந்தம் பருப்பை வைத்தும் வடை செய்வார்கள். ஆனால் நாம் இன்று பச்சை பயரை வைத்து எப்படி வடை செய்வது என்றுதான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய அன்றாட சமையலில் பல பருப்பு வகைகளை நாம் உபயோகப்படுத்தினாலும் பச்சை பயருக்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. பச்சை பயரை நாம் அழகு குறிப்புக்காக பயன்படுத்தினாலும் அதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பச்சைப் பயரை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அதில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், ஃபைபர் போன்ற சத்துக்கள் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.

- Advertisement -

மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இந்த பயரை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவதன் மூலம் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கப்படுகிறது. உடல் எடை இழப்பை விரும்புபவர்கள் தங்கள் உணவில் பச்சைப் பயிரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.

செய்முறை 

முதலில் ஒரு கப் அளவிற்கு பச்சைபயரை எடுத்து நன்றாக சுத்தம் செய்து ஒரு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று பச்சை மிளகாய் போட வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை போட வேண்டும். அதனுடன் நான்கு பல் பூண்டை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை சேர்த்து பல்ஸ் மோடில் ஒரு முறை ஓட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அதனுடன் சிறிய அளவில் இருக்கும் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஊறவைத்த பச்சை பயரை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் அரைக்க வேண்டும். நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

இப்பொழுது இந்த அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடை பொறிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு நாம் தயாரித்து வைத்திருக்கும் பச்சை பயறு மாவை எடுத்து பருப்பு வடை தட்டுவது போல் தட்டி அந்த எண்ணெயில் போட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை எடுத்து எண்ணெயை வடிகட்டி சாப்பிட கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: குக்கரில் சட்னி தாளிச்சு இருக்கீங்களா? ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்தா போதும் அட்டகாசமான சட்னி தயார். சுட சுட இட்லி தோசையோடு இந்த சட்னி வச்சு சாப்பிட்டா நாளெல்லாம் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

மிகவும் எளிமையான அதே நேரம் சத்து மிகுந்த பச்சைப் பயறு வடை தயாராகிவிட்டது. ஏதாவது விசேஷ காலங்களில் எப்போதும் போல் பருப்பு வடை செய்யாமல் ஒரு முறை பச்சைப்பயிறு வடை செய்து கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெறுங்கள்.

- Advertisement -