இவ்வளவு சுலபமான முறையில் பாரம்பரியமான பால் கொழுக்கட்டை செய்ய முடியுமா? புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட இதை பக்குவம் தவறாமல் சுவையாக செய்யலாம்.

pal-kozhukattai
- Advertisement -

பொதுவாகவே இந்த பால் கொழுக்கட்டை அனைவரும் பிடித்த ஒன்று தான. ஆனால் அதை நம்முடைய வீடுகளில் அவ்வளவு எளிதில் செய்ய மாட்டோம். ஏனென்றால் இதில் கொஞ்சம் வேலை முறைகள் அதிகமாக இருக்கும். உடனடியாக செய்து கொடுக்கக் கூடிய உணவு பட்டியலில் எப்போதும் இந்த பால் கொழுக்கட்டை இருக்காது. இப்படி அனைவருக்கும் பிடித்த இந்த பால் கொழுக்கட்டையை இந்த முறையில் செய்து பாருங்கள். பதினைந்து நிமிடங்களில் சுலபமாகவும், அதே நேரத்தில் நம் பாரம்பரிய முறையிலும் செய்து விட முடியும். இதை புதிதாக சமையல் கற்று கொள்பவர்கள் கூட சுலபமா செய்து விடுவார்கள். அதற்கு முதலில் தேவையான பொருட்கள் என்ன என்ன என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: கொழுக்கட்டை மாவு – 1 கப், துருவிய தேங்காய் – 1/2 கப், வெல்லம் – 1/3 கப், ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் 1/2 கப் தேங்காயை அரைத்து நல்ல கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதித்த உடன் அந்த தண்ணீரை மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் நன்றாக சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைந்து கொள்ளுங்கள். (மாவு பிசையும் போது கவனமாக செய்யுங்கள் தண்ணீர் சூடாக இருக்கும். 1 கப் மாவுக்கு, 1 கப் அளவு சுடுதண்ணீர் சரியாக இருக்கும்.) பிசைந்த அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உங்களுக்கு விருப்பமான வடிவில் உருண்டையாகவோ, நீட்டாகவோ உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு மீண்டும் அடுப்பில் பாத்திரம் வைத்து அரை கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் முக்கால் கப் வெல்லத்தை அதில் சேர்த்து நன்றாக கட்டி இல்லமல் கரைத்து வடிகட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒன்றரைக் கப் அளவிற்கு தண்ணீர் நன்றாக கொதித்த உடன் நீங்கள் உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள்.(கொஞ்சம் கொஞ்சமாக தான் போட வேண்டும்) போட்டு நன்றாக கிளறி விடுங்கள். ஏற்கனவே சுடுதண்ணீர் ஊற்றி பிசைந்தால் ஓரளவிற்கு மாவு வெந்தே இருக்கும்.

- Advertisement -

கொதிக்கின்ற தண்ணீரில் நாம் திரட்டி வைத்த கொழுக்கட்டைகளை போட்டதும் 5 நிமிடத்தில் மாவு வெந்து விடும். அதில் கரைத்து வடிகட்டி வைத்து இருக்கும் வெல்ல கரைசலை ஊற்றுங்கள். இந்த வெல்ல கரைசலை மாவு வெந்த பிறகு தான் ஊற்ற வேண்டும். அதற்கு முன் ஊற்றினால் மாவு வேகாது. இத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து ஒரு பத்து நிமிடம் வரை கிளறி விடுங்கள்.

பிறகு கடைசியாக அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் பாலை ஊற்றியவுடன் உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இல்லையென்றால் பால் திரிந்தது போல ஆகிவிடும். சிறிது நேரம் அப்படியே மூடி போட்டு விட்டு விடுங்கள். தேங்காய்ப்பால் வெல்ல கரைசலுடன் நாம் திரட்டி போட்ட கொழுக்கட்டைகள் நன்றாக ஊறி, திக்காக மாறி சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -