சனி தோஷம் தீர சனி பகவான் பரிகாரம்

- Advertisement -

கிராமங்களில் “சனி பிடித்த மாதிரி” என்கிற ஒரு சொல் வழக்கு இருப்பதை பலரும் அறிந்திருப்பர். அதாவது சனி கிரகம் ஒரு நபரின் ஜாதகத்தில் அவருக்கு பாதகமான அமைப்பில் வரும் பொழுது, அவர் படாத பாடுபடுவார் என்பதை குறிக்கும் சொல் வழக்கு தான் அது. பொதுவாக பலரும் தங்கள் ஜாதகத்தில் சனி திசை, சனி தோஷம் ஏற்படும் காலங்களில் மட்டுமே சனி பகவானுக்குரிய பரிகாரங்கள், வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக நம் ஜாதகத்தில் சனி கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி எப்பொழுதும் சனி பகவானால் நம் வாழ்க்கையில் பாதகமான பலன்கள் ஏற்படாமல், என்றும் அவரின் நல்லருள் நமக்கு கிடைக்க செய்ய வேண்டிய சனி பகவானுக்குரிய சில எளிய சனி பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சனி பகவான் பரிகாரம்

கர்ம வினைகளின் அடிப்படையில் ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் நீதி தேவனாக இருப்பவர் சனி பகவான். சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கு மனிதர்களுக்கு இருக்கின்ற மிக எளிமையான பரிகாரம் என்பது தானம் செய்தல் ஆகும். குறிப்பாக உடல் அங்கங்களில் குறைபாடு உள்ளவர்கள், கடைநிலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் போன்றவற்றை செய்வதால் சனிபகவானின் மனம் குளிர்ந்து அந்த தானம் செய்பவருக்கு பல யோகங்களை வழங்குவார்.

ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் காலை எழுந்து, குளித்து முடித்ததும் அருகில் இருக்கின்ற கோயில் வளாகத்தில் அத்தி மரம் இருந்தால், அந்த மரத்தை தொடாமல் 9 முறை வளம் வந்து வணங்க வேண்டும். அத்தி மரம் என்பது திருமாலின் அம்சம் நிறைந்த மரமாகும். திருப்பதி வெங்கடாசலபதி சனி பகவானின் அம்சம் பொருந்தியவர். எனவே அத்திமரத்தை சுற்றி வந்து வணங்குபவர்களுக்கு அந்த திருப்பதி வெங்கடாசலபதியின் அருள் கிடைக்கும் பொழுது, சனிபகவானின் அருளும் கிடைத்ததாக கருத்தில் கொள்ளப்படுகிறது.

- Advertisement -

நீலக்கல் என்பது சனி பகவானின் அம்சம் நிறைந்த நவரத்தினம் ஆகும். வெள்ளியில் ஒரு கேரட் அளவிற்கு மேலான நீலக் கல்லை பதித்து வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வதால், ஜாதகத்தில் சனி கிரகத்தின் தோஷம், திசை நடை பெற்று வந்தாலும், அதனால் வாழ்வில் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஜாதகத்தில் சனி தோஷம், சனி திசை போன்றவை நடைபெறாத காலங்களில் நீலக்கல் மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமைகளில் கால பைரவரை வணங்கி வருவதால் ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். அன்றைய தினத்தில் சனி பகவானை வழிபடும் பொழுது “தசரத சனி ஸ்தோத்திரம்” எனும் மந்திரத்தை துதித்து வழிபடுவதும் நன்மை தரும். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்பவர்களுக்கும் சனி பகவான் நன்மைகளை செய்வார்.

- Advertisement -

சனிக்கிழமைகளில் கால பைரவரை வணங்கி வருவதால் ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். அன்றைய தினத்தில் சனி பகவானை வழிபடும் பொழுது “தசரத சனி ஸ்தோத்திரம்” எனும் மந்திரத்தை துதித்து வழிபடுவதும் நன்மை தரும். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்பவர்களுக்கும் சனி பகவான் நன்மைகளை செய்வார்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என அனைவரும் அறிவர். நமது வாழ்க்கையில் இருக்கின்ற எப்படிப்பட்ட வினைகளும் தீருவதற்கு பசித்த மனிதர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்த பரிகாரமாகும். அந்த வகையில் சனிபகவானின் நல்லருளை பெறுவதற்கு சனிக்கிழமைகளில் தயிர் சாதம், புளியோதரை சாதம் போன்றவற்றை அன்னதானம் செய்வதால் சனி பகவானின் நல்லருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரதோஷ பரிகாரம்

நமது வீடுகளில் இருக்கின்ற பழைய இரும்பு பொருட்களை அவ்வப்பொழுது அகற்றி, வீட்டில் தேவையற்ற பாரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு அறைகளிலும் அவசியமில்லாத பொருட்கள் குப்பைகள் சேர்வதை தவிர்த்து, வீட்டை தூய்மையாக வைத்திருந்தாலே சனி பகவானின் தோஷம் நம்மை அணுகாது காக்கும்.

- Advertisement -