எப்பேர்ப்பட்ட பணத்தட்டுப்பாடாக இருந்தாலும், அது விலகி பணவரவை ஏற்படுத்தி, அதிர்ஷ்டத்தை வாரி வழங்க ஸ்படிகலிங்கத்தை இந்த நேரத்தில் வாங்கினாலே போதும்.

padigalingam
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் இன்றியமையாதது. கடந்து சென்ற நேரத்தை நம்மால் திருப்பிக் கொண்டு வரவே இயலாது என்பதால் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு வினாடியும் நமக்கு மிகவும் முக்கியமே. மேலும் நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து தான் செய்வோம். எந்த காரியத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற வரைமுறையும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எந்த நேரத்தில் ஸ்படிக லிங்கத்தை நாம் வாங்கினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானை வழிபடுபவர்கள் தங்கள் இல்லத்தில் சிவபெருமானின் உருவப்படத்தை வைத்திருந்தாலும், சிவலிங்கமாக வைத்து வழிபட தயங்குவார்கள். ஏனென்றால் சிவலிங்கத்தை வைத்து வழிபடும் பொழுது அதற்குரிய வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே. ஆனால் ஸ்படிகலிங்கத்தை நாம் வீட்டில் வைத்து வழிப்பட்டோம் என்றால் அதற்கு எந்தவித வழிமுறைகளும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அளவில் சிறியதாக இருக்கும் ஸ்படிகலிங்கத்தை எந்த நாளில் வாங்குவது என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக நாம் காலண்டரை பார்க்கும்பொழுது நல்ல நேரம், எமகண்டம், குளிகை, ராகு காலம் என்று ஒவ்வொரு நாளிற்கும் ஒவ்வொரு நேரத்தை குறிப்பிட்டு இருப்பார்கள். நல்ல நேரம் என்பது நாம் நல்ல காரியங்களை செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் நேரம் ஆகும். எமகண்டம், ராகு காலம் போன்ற நேரங்களில் நாம் நல்ல செயல்களை செய்வதை தவிர்த்து விடுவோம். அதேபோல் குளிகை நேரம் என்று வரும்பொழுது நாம் திரும்பத் திரும்ப நமக்கு என்ன நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட குளிகை நேரத்தில் கடனை திருப்பி அடைத்தால் கடன் விரைவில் அடையும் என்றும், திருமணம் மற்றும் அசுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நாம் ஸ்படிகலிங்கத்தை வாங்கி நம் வீட்டில் அபிஷேகம் செய்து பிரதிஷ்டை பண்ணினோம் என்றால் சிவபெருமான் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களையும் நீக்கி சுகமான வாழ்க்கையை அருள்வார்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று 3:00 முதல் 4:30 வரை குளிகை நேரம். இந்த குளிகை நேரத்தில் ஸ்படிக லிங்கத்தை நாம் வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வாங்கி வந்து சுத்தமான ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை வைத்து அதில் சில வில்வ இலைகளையும் போட்டு அந்த நீரினுள் ஸ்படிகலிங்கம் மூழ்கும் அளவிற்கு வைக்க வேண்டும். பிறகு ஒரு வில்வ இலையை வைத்து அதன் மேல் ஸ்படிகலிங்கத்தை பூஜை அறையில் வைத்து, அவருக்கு நெய் தீபம் ஏற்றி மனதார அவரை வழிபட வேண்டும்.

இவை அனைத்தையும் நாம் குளிகை நேரத்தில் தான் செய்ய வேண்டும். ஸ்படிக லிங்கத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்வதற்கு நேரம் பத்தாது என்பவர்கள், முன்கூட்டியே ஸ்படிகலிங்கத்தை வாங்கி வந்து விடலாம். இந்த குளிகை நேரத்தில் பிரதிஷ்டை செய்து நெய் தீபமேற்றி வழிபடலாம். இவ்வாறு வழிப்படும் பொழுது நம்மால் இயன்ற அளவு “ஓம் நமசிவாய ஓம்” என்ற மந்திரத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இழுத்து மூடும் நிலையில் உள்ள வியாபாரம் கூட சூடு பிடித்தது லட்ச லட்சமாக லாபத்தை சம்பாதிக்க இந்த ஒரு பொருளை தானமாக தந்தாலே போதும்.

இந்த வழிபாட்டை நாம் தினமும் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பண தடையாக இருந்தாலும் அது விலகி நமக்கு அதிர்ஷ்டத்தை அருள்வார்.

- Advertisement -