பண வரவு மற்றும் தம்பதி ஒற்றுமை அதிகரிக்க வழிபாடு

sampanki malai
- Advertisement -

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது என்றால் அதில் பெரும்பாலும் கணவன் மனைவிக்கு இடையே தான் அதிகமான அளவு சண்டைகள் ஏற்படும். அந்த சண்டைகள் ஏற்படுவதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக பணம் ரீதியான பிரச்சனைகள் உண்டாகும். கணவன் ஒழுங்காக சம்பாதிக்காமலோ அல்லது சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து மனைவியிடம் கொடுக்காமலோ அல்லது தேவையற்ற செலவுகளை செய்தாலோ கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி பணம் ரீதியாக அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மனவருத்தத்தில் ஆளாகி இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு சம்பங்கி பூ மாலையை எப்படி சூட்டி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணம் ரீதியாக ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்குவதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக தேவை. அதேபோல் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிப்பதற்கும் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் தேவைப்படும். காரணம் மகாலட்சுமி தாயார் தன்னுடைய கணவரான மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தரமாக குடியிருப்பவள் என்பதால் அவளைப் போலவே நாமும் நம் கணவரின் மனதில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம்.

- Advertisement -

இப்படி நாம் மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயார் கூறிய நாளான வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மகாலட்சுமி தாயாருக்கு எட்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு சம்பங்கி பூ மாலையை வாங்கி சாற்ற வேண்டும். ஒரு முழமாக இருந்தாலும் பரவாயில்லை. வசதி இருப்பவர்கள் எட்டு முழம் வாங்கி கொடுக்கலாம். வெறும் சம்பங்கி பூ மட்டுமே சேர்த்த மாலையை வாங்கி தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தந்துவிட்டு எட்டு முறை மகாலட்சுமி தாயாரை வலம் வந்து “நீ உன் கணவனின் மார்பில் நிரந்தரமாக இருப்பது போல் நானும் என் கணவனின் மார்பில் நிரந்தரமாக இருக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்துவர கணவன் மனைவிக்கிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்குவதோடு பண வரவிற்கும் எந்தவித குறையும் இருக்காது.

- Advertisement -

அதோடு நின்று விடாமல் வாராவாரம் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு நெல்லிக்கனி அல்லது மாதுளம் பழம் இவற்றை வைத்து சம்மங்கி பூக்களால் அலங்கரித்து மகாலட்சுமி தாயாரின் போற்றிகளை கூறி வரவேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நிரந்தரமாக மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: காணும் பொங்கல் அன்று செய்ய வேண்டிய தானம்

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பணம் ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழிபட்டால் அவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

- Advertisement -