நம் கையில் இருக்கும் பணம் நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரயம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா?

cash
- Advertisement -

சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்கள் தாங்கள் செய்யக்கூடிய அன்றாட வேலைகளை சரிவர செய்து வந்தாலே போதும். அந்த வீட்டில் வறுமை தங்காது. மகாலட்சுமி குடி கொண்டு விடுவாள். ஒரு வீட்டில் பண கஷ்டம் வருவதற்கும், சந்தோஷம் இருப்பதற்கும் காரணமாக இருப்பவள் பெண். பெண்கள் செய்யக்கூடிய சில தவறுகளை திருத்திக் கொண்டு பாருங்கள். இந்த தவறுகளை நீங்கள் செய்வதன் மூலம் கஷ்டம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், சாஸ்திரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும், திருத்திக் கொண்டால் போதும். சாஸ்திர சம்பிரதாயத்தில் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

வீட்டில் நாம் செய்யக்கூடிய முதல் தவறு. சில வீட்டில் ஆண்கள் துணி துணித்து வைக்கிறார்கள். சில வீட்டில் பெண்கள் துணியை துவைக்கிறார்கள். சில வீடுகளில் வாஷிங்மெஷின் துவைக்கின்றது. எப்படியாக இருந்தாலும் சரி, வீடு என்று இருந்தால் ஈரத் துணி தண்ணீர் சொட்ட சொட்ட காயாமல் அப்படியே இருக்கக் கூடாது. துவைத்த துணியை உலர வைக்காமல் பக்கெட்டில் நீண்டநேரம் வைக்கக்கூடாது. தண்ணீர் சொட்டும் படி பாத்ரூம் கம்பியில் தொங்க விடவும் கூடாது. பாத்ரூம் கதவில் தொங்க விடக்கூடாது. துணியை துவைக்கலாம், என்று நினைத்து பவுடர் போட்ட தண்ணீரிலும் துணியை வெகு நேரம் ஊற வைக்கக் கூடாது. ஒரு மணிநேரம் துணிகள் சோப்பு தண்ணீரில் உறியதும் துவைத்து விடுங்கள். மணிக்கணக்கில் அதை அப்படியே விட்டு கெட்ட வாடை வீச வைக்காதீர்கள். இந்தத் ஈரத் துணியில் இருந்து வீசக்கூடிய கெட்ட வாடை வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும்.

- Advertisement -

நீங்கள் துணிகளை கையில் துவைத்தாலும் அதை உடனடியாக உலர வைத்து விடவேண்டும். வாஷிங் மெஷினில் துவைத்தாலும் அதை எடுத்து உடனடியாக ஊளர வைத்துவிட வேண்டும். ஈரத்துணி எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த வீட்டில் நிச்சயமாக பணமும் வீண் விரயமாகும்.

cloth-drying1

இதேபோல் வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குழாயில் இருந்து அனாவசியமாக தண்ணீர் சொட்ட கூடாது. பணம் வீண் விரயம் ஆகும் என்று சொல்லுவார்கள். இது நிறைய பேருக்கு தெரியும். ஆனால் வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குழாயிலிருந்து மட்டும்தானா தண்ணீர் சொட்ட கூடாது.

- Advertisement -

பெண்கள் தலைக்குக் குளித்துவிட்டு தங்களுடைய தலைமுடியை தண்ணீர் சொட்ட சொட்ட விடக்கூடாது. நிறைய பெண்களின் பின் பகுதியில் நாம் பார்த்திருப்போம். தலைக்கு குளிப்பார்கள். மேல் பகுதியை முடி அனைத்தையும் துடைத்து இருப்பார்கள். ஆனால் கீழே நுனிப் பகுதியில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும். சில பெண்களின் ஆடைகளில் கூட பின்பக்கத்தில் முழுவதும் ஈரமாகி விடும். அப்படியே கடைக்கு செல்வார்கள்.

hair1

இப்படி பெண்களின் தலைமுடியின் நுனியில் தண்ணீர் சொட்டினாலும் வீட்டில் பணம் வீண் விரயமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவும் தவறான ஒரு செயல் தான். இனி தலை துவட்டும் போது முடியின் அடிபாகம் வரை நன்றாக துவட்டி கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பணம் வீன் விரையம் ஆனால், அதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. மேலே சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் மாற்றிப் பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல வித்தியாசம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -