இந்த இடத்தில் பணம் வைத்தால், எந்த காலத்திலும் உங்களிடம் பணம் தங்கவே தங்காது. வீட்டில் பணத்தை வைக்கவே கூடாத இடம் எது?

mahalakshmi2
- Advertisement -

எல்லோரும் கடினமாக உழைக்கின்றோம். உழைப்புக்கு தகுந்தபடி வருமானமும் வருகின்றது. ஆனால், வந்த வருமானம் சேமிப்பில் தங்க வில்லை. வருமானத்திற்கு ஏற்ற செலவு வந்தால் கூட பரவாயில்லை. வருமானத்தையும் தாண்டி அதிகப்படியான செலவுதான் வருகின்றது. இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு. பணம் கையில் தாங்காமல் கரைந்து கொண்டே இருக்கிறதே. இதை சரி செய்ய ஏதாவது ஒரு வழி உண்டா. பணத்தை எந்த இடத்தில் வைத்தால் பணம் சேரும். பணத்தை எந்த இடத்தில் வைக்கவே கூடாது என்பதை பற்றிய பயனுள்ள ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பணத்தை வைக்கக்கூடாத இடம்:
பத்தாயிரம் சம்பாதிப்பவர்களுக்கும் இந்த குறிப்பு பொருந்தும், ஐம்பதாயிரம் சம்பாதிப்பவர்களுக்கும் இந்த குறிப்பு பொருந்தும். யாராக இருந்தாலும் சரி, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு வைக்க கூடாது தெரியுமா? வீட்டில் அடுத்தவர்களுடைய கண்களில் படும்படி வைக்கவே கூடாது. நீங்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு என்பதை அனாவசியமாக உங்களுக்கு ரொம்பவும் தெரிந்தவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள கூடாது. உங்களுடைய வருமானத்தின் ரகசியம் உங்களுக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

கணவன், மனைவி, பிள்ளைகளுக்குள் வருமானத்தை தெரியப்படுத்துவதில் தவறு கிடையாது. உங்கள் குடும்பத்தை தவிர அடுத்தவர்களிடம் வருமானத்தை சொன்னால் அது பிரச்சனை தான். ஆனால், இந்த காலத்தில் கணவன் வருமானம், மனைவிக்கு தெரிவதில்லை. மனைவி வருமானம், கணவருக்கு தெரிவதில்லை. பிள்ளைகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது தாய் தந்தைக்கு தெரியாமல் இருக்கிறது. எப்படி இருந்தாலும் பணம் என்று வந்தாலே அது குடும்பத்திற்குள் குழப்பத்தை தான் உண்டாக்குகிறது.

சரி, வரவேற்பரையில் எல்லோருக்கும் தெரியும் படி பணத்தை வைப்பது, பர்சை வைப்பது போன்ற விஷயங்களை செய்யவே கூடாது. வெளி ஆட்களுக்கு நீங்கள் பணம் தருவதாக இருந்தாலும், நிறைய நோட்டுகளை மொத்தமாக வெளியே எடுத்து, அதிலிருந்து 100 ரூபாயை எடுத்துக் கொடுக்க கூடிய விஷயங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும். பார்ப்பவர்கள் கண்களுக்கு ‘இவரிடம் நிறைய பணம் இருக்கும் போலிருக்கே!’ கையிலே இவ்வளவு காசு வைத்திருக்கிறார். என்று நினைத்தால் முடிந்தது. கையில் இருக்கும் பணம் மொத்தம் கடகடவென செலவாகிவிடும்.

- Advertisement -

அடுத்தவர்களுக்கு தெரியும்படி பணம் வைக்கவே வைக்காதீங்க. சில பேர் படுக்கையறையில் பெட்டுக்கு அடியில் பணம் வைத்திருப்பார்கள். அதை தவிர்ப்பது நல்லது. பெட்டுக்கு(மெத்தை) அடியில் பணம் வைத்தால் வீண் விரயம் அதிகமாகும். படுக்கையறையில் கூடுமானவரை பணம் வைக்க வேண்டாம். ஆனாலும் நிறைய பேருக்கு படுக்கை அறையில் தான் பீரோ இருக்கும். அப்படி இருந்தாலும் பீரோவின் மேல் பக்கத்தில் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த இடத்தில் பணத்தை வைத்தால் பணம் விரையம் ஆகாமல் இருக்கும். பூஜை அறையில் பணத்தை வைக்கலாம். பூஜை அறையில் என்றால் சுவாமி படங்களுக்கு அருகிலேயே விளக்கு ஏற்றும் இடத்திற்கு அருகிலேயே, தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பூஜை செய்யக்கூடிய இடத்திற்கு பக்கத்தில் ஏதாவது அலமாரி இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் ஒரு டப்பா, பர்ஸ் அல்லது மரப்பெட்டி உங்கள் சௌகரியம் போல ஏதாவது ஒரு பொருளை வைத்து அதன் உள்ளே பணத்தை வைத்து மூடி வைக்க வேண்டும்.

- Advertisement -

தினசரி செலவுக்கு அதிலிருந்து பணம் எடுக்கக் கூடாது. பணம் அந்த இடத்தில் இருக்கலாம். தினசரி செலவுக்கு தனியாக ஒரு பர்சில் பணத்தை போட்டு உங்களுக்கு சவுகரியமான இடத்தில், யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

பர்சில் 500 ரூபாய் இருக்கிறது. காய்கறி வாங்க போறீங்க, 500 ரூபாயையும் வெளியில் எடுத்து, 50 ரூபாய்க்கு காய் வாங்கக்கூடாது. அந்த 50 ரூபாயை தனியாக எடுத்து வைத்து தான் காய் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு விஷயம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்போதுமே ஒரு ஒளிவு மறைவு, நெளிவு சுளிவு இருக்க வேண்டும். பிறர் கண்ணுக்குத் தெரியும்படி பணத்தை வைப்பதும் தவறு. பணத்தை எண்ணுவதும் தவறு.

இதையும் படிக்கலாமே: உங்களை பிரிந்தவர்களை மீண்டும் உங்களை தேடி வர வைக்க இந்த ஒரு இலை போதும். பிரிந்த உறவுகளை மீண்டும் நம்மிடம் சேர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

குறிப்பாக உண்டியல் காசை கூட யார் கண்ணுக்கும் தென்படும்படி வைக்காதீங்க. நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் பூஜை அறையில் யாருக்கும் தெரியாமல் பணத்தை சேர்த்து வைப்பது சேமிப்பை உயர்த்தும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -