நாளை பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி. பணக்கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு இப்படி செய்யுங்கள்.

vinayagar
- Advertisement -

நாளை வரக்கூடிய தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால் நம் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக தேய்பிறை நிலவு போல தேய்ந்து கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் கஷ்டம் கண்ணுக்கு தெரியாமல் காணாமலேயே போய்விடும். கஷ்டங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை முறைப்படி எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றிய ஒரு பதிவு இன்று உங்களுக்காக.

நாளைய தினம் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, விக்னங்களை தீர்க்கும் ‘விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள். விரதம் இருப்பது என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. உங்கள் சவுகரியம் போல விரதமிருக்கலாம்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு மேலாக இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜையை உங்களுடைய வீட்டில் துவங்க வேண்டும். பூஜை அறையில் சாமி படங்களுக்கெல்லாம் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் அது மிக மிக நல்லது. ஆனால் எல்லோராலும் இந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது என்பது இயலாத ஒரு காரியம். அப்படி இருக்கும்போது என்ன செய்வது.

ஒரு வெள்ளைருக்கன் இலையை எடுத்து வாருங்கள். அந்த இலையை தண்ணீரில் கழுவி விட்டு, பூஜையறையில் வைத்து விடுங்கள். சுத்தமான மஞ்சளில் தண்ணீர் ஊற்றி பிசைந்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, அந்த வெள்ளருக்கன் இலை மேல் வைத்து, பிள்ளையாருக்கு குங்குமப்பொட்டு வைத்து, அருகம்புல் வைத்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த வெள்ளருக்கன் இலையின் மேல் இருக்கும் விநாயகருக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நிவேதனம் வைத்து விநாயகருக்கு முன் அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லி அந்த கஷ்டங்கள், அந்த சங்கடங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

விநாயகருக்கு மிகவும் உகந்த சிறப்பு வாய்ந்த சங்கட சதுர்த்தி நன்னாளில் இந்த எருக்கன் இலை மஞ்சள் பிள்ளையார் வழிபாடு இரட்டிப்பு பலனை நமக்கு கொடுக்கும். வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுங்கள். உங்களுக்கு தெரிந்த விநாயகருக்கு பிடித்த மந்திரங்களை உச்சரித்து விட்டு இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி, பூஜையை நிறைவு செய்து கொண்டு, விநாயகரின் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

நாளைய தினம் வழிபாடு முடிந்த பின்பு, அந்த மஞ்சள் பிள்ளையார் அப்படியே இருக்கட்டும். செவ்வாய்க்கிழமையும் பிள்ளையார் உங்கள் வீட்டில் அப்படியே இருக்கட்டும். புதன்கிழமை காலை குளித்து விட்டு அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு வெள்ளை எருக்கன் இலையை கால் படாத இடத்தில் செடி கொடிகளிலோ போட்டு விட வேண்டும். இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -