உங்கள் ராசிக்கு ஏற்றபடி உங்கள் கழுத்தில் இந்த ஒரு மாலையை தொடர்ந்து அணிந்து வந்தால் போதும். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.

panjabootha malai
- Advertisement -

இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்க நகைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாம் அணியும் நகைகளோடு சேர்த்து பல அளப்பரிய சக்திகள் கொண்ட பஞ்சபூத மாலையையும் தொடர்ச்சியாக அணிவதன் மூலம் நாம் நமது இலக்கை விரைந்து அடைய முடியும். எண்ணியது நிறைவேறும். சரி, பஞ்சபூத மாலை என்றால் என்ன? அதை எந்த ராசிக்கார்கள் எப்படி அணியலாம் போன்றவற்றை இப்போது பார்ப்போம் வாருங்கள்.

பஞ்சபூத மாலை என்பது ரத்த சந்தன மாலை, துளசி மாலை, ஸ்படிக மாலை, தாமரை மணிமாலை மற்றும் ருத்ராட்ச மாலை என்பதாகும். இந்த ஐந்து வகை மாலைகள் ஐந்து வகையான ஆற்றல்களை கொண்டதாக கருதப்படுகிறது. ரத்த சந்தன மாலையை நாம் அணியும்போது நமக்கு துணிச்சல் அதிகரிக்கிறது. மேலும் தெளிவான பேச்சு சாதுரியம் ஏற்படுகிறது. எதிரிகளிடம் இருக்கும் பிரச்சினைகள் விலகுகின்றன. கண் திருஷ்டிகள் நீங்குகின்றன. மேலும் பணவரவு அதிகரிக்கிறது. மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் விவேகம் நிறைந்து இருக்கும்.

- Advertisement -

துளசி மாலை நமக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறது. உடல் வலிமையை தருகிறது. மேலும் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கிறது. நாராயணனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கிறது. ஸ்படிக மாலை அணிவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. நல்ல அதிர்வு அலைகள் ஏற்படுகிறது, சிறுநீரகப் பிரச்சனைகள் குறைகிறது. இதயம், நுரையீரல், மூளை போன்ற உறுப்புகளை சீராக இயக்க வைக்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

தாமரை மணி மாலையை அணிவதால் நமக்கு லஷ்மி கடாட்சம் ஏற்படுகிறது. நல்ல எண்ணம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் அந்த நல்ல எண்ணங்களை செயல்படுத்தும் ஆற்றலையும் தருகிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. ருத்ராட்ச மாலை அணிவதால் நமக்கு முற்பிறவி மட்டும் அல்லாமல் இந்த பிறவியில் நாம் செய்த பாவங்களும் தீரும். மேலும் நமக்கு மன நிம்மதியை ஏற்படுதி தருகிறது. மன நிறைவான வாழ்க்கையை உண்டு பண்ணுகிறது. மரண பயத்தை நீக்குகிறது. விபத்துக்கள் நேராமல் நம்மளை பாதுகாக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: ராகு காலம், எமகண்ட நேரத்தில் இதை எல்லாம் செய்தால் நல்ல வளர்ச்சி இருக்கும்.

இப்பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்த மாலையை அணிய வேண்டும் என்று பார்ப்போம். மேஷம் – ரத்த சந்தனமாலை, ரிஷபம் – ஸ்படிக மாலை, மிதுனம் – தாமரை மணிமாலை, கடகம் – ஸ்படிக மாலை மற்றும் தாமரை மணிமாலை, சிம்மம் – தாமரை மணிமாலை மற்றும் ருத்ராட்ச மாலை, கன்னி – தாமரை மணி மாலை மற்றும் துளசி மாலை, துலாம் – ஸ்படிக மாலை, விருச்சிகம் – ரத்த சந்தன மாலை, தனுசு – தாமரை மணிமாலை மற்றும் ருத்ராட்ச மாலை, மகரம் – தாமரை மணிமாலை மற்றும் ஸ்படிக மாலை, கும்பம் – தாமரை மணிமாலை மற்றும் ரத்த சந்தன மாலை, மீனம் – ஸ்படிக மாலை மற்றும் ரத்த சந்தன மாலை.

- Advertisement -