நாளை தேய்பிறை பஞ்சமி! நம் வீட்டில் இருக்கும் பீடைகள் விலக, நம்மை பிடித்த நோய் நொடிகள் தீர, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட, வாராகி அம்மன் வழிபாட்டை எப்படி செய்வது?

varahi-vilakku
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் உடனடியாக தீர்வு கொடுக்கும் சக்தி கொண்டவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். குறிப்பாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மன் வழிபாடு நம்முடைய கஷ்டங்களை படிப்படியாக குறைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. நாளை ஆடி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை சுலபமாக வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Varahi amman

உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தாலும் சரி, உடலில் தீராத நோய் பிரச்சனை இருந்தாலும் சரி, மன கஷ்டம் பண கஷ்டம் இருந்தாலும் சரி, எதிரிகளால் வாழ்க்கையில் முன்னேற்ற தடை இருந்தாலும் சரி, நாளை வாராஹி அம்மன் வழிபாடு உங்களுக்கு விமோசனத்தை தேடித்தரும். நாளை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு விரதத்தை துவங்கலாம். உங்களுடைய உடல் நிலையைப் பொறுத்து, பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அப்படி இல்லை என்றால் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருப்பதிலும் தவறு கிடையாது.

- Advertisement -

வாராஹி அம்மன் வழிபாடு என்றால் அதற்கு உகந்த நேரம் மாலை நேரம். ஆகவே, மாலை 6 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் இந்த வாராகி அம்மன் பூஜையை தொடரவேண்டும். பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் வாராஹி அம்மனின் திருவுருவ படம் இருக்காது. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. திருவுருவப்படம் இல்லாதவர்கள் வாராஹி அம்மனை நினைத்து வீட்டில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அம்மனின் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சூட்டலாம்.

arali

வாரஹி அம்மன் திரு உருவப்படம் இருந்தால் அந்த அம்மனுக்கு சிவப்பு நிற அரளி மலர்களை சாத்தி, பூஜையறையில் தீபத்தினை வாராஹி அம்மனை நினைத்து ஏற்றவேண்டும். வாராஹி அம்மனுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து வைக்கலாம். நிவேதனம் செய்ய முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழங்கள் இருந்தால் கூட அதை வாராஹி அம்மனுக்கு நிவேதனமாக வைக்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக பூஜை அறையில் அமர்ந்து வராகி அம்மனுக்கு உகந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நாளை பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை மனதார நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.

varahi-amman

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

- Advertisement -

kamatchi-amman

இது வாராஹி அம்மனின் காயத்ரி மந்திரம். இந்த காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும். இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், உச்சரிக்கத் தெரியாதவர்கள் ‘ஓம் வாராஹி தேவியை போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அடுத்தபடியாக மனமுருகி உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வாராஹி அம்மனை முழு நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளுங்கள்.

vilakku-pray

வாராஹி அம்மனுக்கு விரதமிருந்து, நிவேதனம் வைத்து, மந்திரம் உச்சரித்து வழிபாடு செய்வதை விட தூய்மையான மனதோடு, தூய்மையான உடல் சுத்தத்தோடு மனதில் எந்த ஒரு சுயநலமும் கெட்ட எண்ணமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே முதல் கட்டுப்பாடு.

poojai1

இறுதியாக அம்மனுக்கு தீப தூப கற்பூர ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். சாப்பிடாமல் விரதம் இருந்தவர்கள் அம்மனுக்கு பிரசாதமாக வைத்த நிவேதியத்தினை சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்று அந்த அம்பாளை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -