இந்தாண்டு இறுதிக்குள் தமிழகம் இயற்கை பேரழிவை சந்திக்குமா?- பஞ்சாங்கம் கூறுவது என்ன ?

“கலியுகத்தில் நாம் கற்பனை செய்ய முடியாத அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும்” என்று மகாபாரத்தில் “ஸ்ரீ கிருஷ்ண” பரமாத்மாவே கூறியிருப்பதாக கருதப்படுகிறது. நாம் அனைவருமே இப்போது கலியுகத்தில் தான் வாழ்கிறோம். தினந்தோறும் பொய்கள், புரட்டுகள் என்று மக்கள் வாழும் கலியுகத்தில் இயற்கையும் பல விதங்களில் அவர்களை தண்டிக்கும் என்று வேதங்களிலேயே தீர்க்கதரிசனமாக கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் ஆண்டுகளுக்கான பஞ்சாங்க கணிப்பு படி இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட இருப்பதாக சில செய்திகள் வலைத்தளங்களில் உலா வருகின்றன அதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

olai chuvadi

சமீபமாக சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் தமிழகத்திற்கு இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பேராபத்து ஏற்பட விருப்பதை தமிழ் ஆண்டு பலன்களை பஞ்சாங்கம் கொண்டு முன்பே கணித்திருக்கும் சித்தர்கள் முன்பே எச்சரித்து இருப்பதாக கூறப்படும் ஒரு செய்தி வலம் வருகிறது. அதில் தமிழகத்தில் சமீப காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக்கூறி, பேராபத்து ஏன் ஏற்படப்போகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தொடர் போராட்டங்கள், ஏராளமான கோவில்களில் நடந்திருக்கும் முறைகேடுகள், கோவில் நிர்வாகத்தில் இருப்பவர்களே கோவில் சிலைகள் திருட்டு, கடத்தல் குற்றசாட்டுகளுக்கு உள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் இன்ன பிற பழமையான கோவில்களில் ஏற்பட்ட தீவிபத்துகள், தேனியில் நடந்த காட்டு தீ விபத்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க பட்ட யானை, கோவிலுக்குள்ளேயே அதன் பாகனை மிதித்து கொன்றது என அனைத்துமே தமிழகத்திற்கு அபசகுனமாக நிகழ்வுகளாகவே ஏற்பட்டிருக்கிறது.

பிற எல்லாவற்றையும் விட புனிதம் மிகுந்த கோவிலிகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தமிழகத்தில் புகழ் பெற்றிருக்கும் அம்மன் கோவில்களுக்கு உரிய காலத்தில் பூஜைகள்,விழாக்கள் நடைபெறாமல் போவதால் ஏற்பட்ட தெய்வங்களின் உக்கிரம் காரணமாக தமிழகத்தை தாக்கவிருக்கும் அந்த பெரிய ஆபத்து கடுமையான இயற்கை சீற்றமாக இருக்கலாம் எனவும், அதுபோன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படாமல் இருக்க, தமிழகத்திற்கு நன்மைகள் நடக்க உக்கிரமடைந்திருக்கும் அம்மன் கோவில்களுக்கு சரியான காலத்தில் பூஜைகள் மற்றும் விழாக்களை நடத்துவது தான் என்பது ஆன்மீக அறிஞர்களின் கருத்தாக அதில் கூறப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் செய்தாலும் டிசம்பர் மாத இறுதிக்குள் பேராபத்துகள் தமிழகத்திற்கு ஏதேனும் ஏற்படுமா என்பதற்கு விடை, அம்மாதம் இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்பது மட்டுமே.

இதையும் படிக்கலாமே
விளம்பி ஆண்டு மழை குறித்து பஞ்சாங்கம் கூறுவது என்ன

இது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panjangam tamil nadu prediction in Tamil