- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபப்பாளி பழத்தை முகத்தில் இப்படி போட்டால் பளபளன்னு சருமம் 10 நிமிடத்தில் வந்துவிடும். அழகு இல்லைங்க,...

பப்பாளி பழத்தை முகத்தில் இப்படி போட்டால் பளபளன்னு சருமம் 10 நிமிடத்தில் வந்துவிடும். அழகு இல்லைங்க, பேரழகு கிடைக்க இந்த குறிப்பு போதும்.

- Advertisement -

நம் முக அழகை முழுவதுமாக பாதுகாக்க பப்பாளி மிகவும் உதவியாக இருக்கும். பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது நம்முடைய சருமத்திற்கும் அதிக அளவில் நன்மையை தரக்கூடியது. இந்த பப்பாளியில் உள்ள வைட்டமின், மினரல்ஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. பப்பாளி நம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு அழுக்கு போன்றவைகளை நீக்கும் தன்மை உடையது. இந்த பப்பாளியை வைத்து நம் முகத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒரு டீஸ்பூன் பப்பாளி பழ சாறு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு இவை இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் ஒரு பத்து நிமிடம் ஸ்க்ரப் செய்யுங்கள். பின்பு முகத்தை அலம்பி விடுங்கள். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி விடும். (பப்பாளியை தோல் சீவி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்தால் பப்பாளி சாறு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் அரைத்த பப்பாளி விழுவதோடு அரிசி மாவை சேர்த்து முகத்தில் போடலாம்.)

- Advertisement -

ஒரு சிலரை பார்க்கும் போது நல்ல கலராக இருப்பார்கள். ஆனால் கண்களுக்கு கீழ் மட்டும் கருவளையம் தோன்றி பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும். அவர்கள் அரை டீஸ்பூன் பப்பாளி சாறு, அரை டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், ஒரு விட்டமின் ஈ கேப்சூல் இது மூன்றையும், ஒன்றாக கலந்து கண்களை சுற்றி உள்ள கருவளையம் மீது தினமும் தேய்த்து வந்தால் விரைவிலே கண்களின் கருவளையம் நீங்கிவிடும்.

இந்த பப்பாளியை வைத்து அருமையான ஒரு ஃபேஸ் பேக் கூட செய்யலாம். அதற்கு பப்பாளி சாறு ஒரு ஸ்பூன், முல்தானிமட்டி ஒரு ஸ்பூன், இவை இரண்டையும் நன்றாக கலந்து 20 நிமிடம் முகத்தில் தேய்த்து விடுங்கள். பிறகு எப்போதும் போல முகத்தை வாஷ் செய்தலே போதும். உங்கள் முகம் பளிச்சென்று மாறும் அதிசயத்தை நீங்களே கண்டு வியந்து போவீர்கள்.

- Advertisement -

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய சவாலே முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்குவது தான், அதற்கும் இந்த பப்பாளியில் வழி உண்டு. இரண்டு ஸ்பூன் பப்பாளி சாறு, மூன்று டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தொடர்ந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவினாலே போதும் பருக்கள் மறைந்துவிடும்.

சில பழங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்து விடாது. ஆனால் இந்த பப்பாளி ஆண்டு முழுவதுமே நமக்கு கிடைக்கும். இப்படி சாதாரணமாக இது கிடைப்பதால் தான் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை. இந்த பப்பாளியை தினமும் உண்டு வந்தால் எத்தனையோ வியாதிகளிடம் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். எனவே அழகுக்காக மட்டும் இதை பயன் படுத்தாமல் ஆரோக்யத்திற்காவும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டுங்கள். பப்பாளியை அரைத்து சாறு எடுக்க முடியாதவர்கள் பப்பாளி ஜெல் கடைகளில் கிடைக்கிறது அதை உபயோகிக்கலாம். இல்லையென்றால் பப்பாளியை அரைத்த விழுதாகவே குறிப்புக்கு பயன்படுத்தலாம்.

சற்று முன்