பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்துல இப்படி செஞ்சா தட்டு மொத்தமும் காலி ஆகி விடுமே! இதுல இவ்ளோ சத்து இருக்குன்னு தெரியாம போச்சே!

parangikai-kottu
- Advertisement -

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும் பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக எப்படி செய்யலாம்? இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

parangikai

பரங்கிக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, வர மிளகாய் – 2, பூண்டு பற்கள் – 4, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, குழம்பு மிளகாய்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

பரங்கிக்காய் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் பரங்கிக்காயை தோல் சீவி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு சதைப்பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் பொழுது கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

parangikai1

கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். பின்னர் தாளிக்க கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு வர மிளகாய்களை காம்பு நீக்கி கில்லி போடுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள்.

- Advertisement -

இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கிய பின்பு நீங்கள் வெட்டி வைத்துள்ள பரங்கிக்காய்களை சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒருமுறை நன்கு பிரட்டுங்கள். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு குழம்பு மிளகாய் தூள் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சீனி சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் சேர்க்க தேவையில்லை.

parangikai-kottu1

பரங்கிக்காய் சீக்கிரமே வெந்து விடக் கூடிய ஒரு காய் தான் என்பதால் மசாலாவின் பச்சை வாசம் போக நன்கு வதங்கியதும் கொஞ்சம் தண்ணீரை தெளித்து பிரட்டி விட்டு ஆறிலிருந்து, எட்டு நிமிடம் வேக வைத்து எடுத்தால் சூப்பராக வெந்திருக்கும். பிறகு நறுக்கிய மல்லி தழைகளை சேர்த்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள். அடிக்கடி பரங்கிக்காய் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் உடனே நிவர்த்தியாகும். மேலும் உடலில் இருக்கும் பித்தம் நீக்கி மூல நோய், எரிச்சல், வயிற்று பிரச்சனைகளை எளிதாக தீரும்.

- Advertisement -