பூரி மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்

poori-masala
- Advertisement -

அனைத்து டிபன் வகைகளுக்கும் வெவ்வேறு நிறைய தொட்டுக்கும் வகைகள் உள்ளது. ஆனால், பூரிக்கு மட்டும் எப்போதுமே பூரி மசாலா மட்டும் தான். அந்த அளவிற்கு பூரி மசால் சுவையாக இருக்கும். இந்த பதிவில் பூரி மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

poori_1

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
கடலை பருப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி – 1/2 துண்டு
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
பச்சை பட்டாணி – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு

பூரி மசாலா செய்முறை:

வேகவைத்த உருளை கிழங்கினை ஒரு பவுலில் போட்டு நன்றாக நசுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் அதில் சீரகம் போட்டு அதனுடன் கடலை பருப்பினை சேர்த்து வறுக்கவும்.

- Advertisement -

poori_2

பிறகு கடலை பருப்பு வறுபட்டவுடன் அதில் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி , மஞ்சள் தூள், மற்றும் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் வெட்டிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக செவரும் வரை வதக்கவும்.

poori_3

பிறகு அதில் நாம் ஏற்கனவே நசுக்கிய உருளைக்கிழங்கினை கொட்டி அதனின் வேகவைத்த பட்டானி சேர்த்து நன்றாக வேகா விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பூரி மசாலா தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
கோபி 65 செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Poori masala recipe in Tamil. It is also called as Poori masala seimurai or Poori masala seivathu eppadi in Tamil or Poori masala preparation in Tamil.

- Advertisement -