பருப்பு வகைகள் | Paruppu vagaigal in Tamil
பருப்பு வகைகள் பெயர்கள் in English: உலகெங்கும் மனிதர்கள் அன்றாடம் உண்ணும் உணவில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற பல சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவின் முக்கிய பங்காக இருப்பவை பருப்பு வகைகள்(paruppu vagaigal) ஆகும். இந்த பூமியெங்கும் பல வகையான பருப்புகள் விளைந்தாலும் சில குறிப்பிட்ட வகையான பருப்புகள் மட்டுமே மனிதர்களின் உணவு பயன்பாட்டிற்கு தகுதியானவை ஆக உள்ளன. அந்த பருப்பு வகைகள் என்னென்ன? அந்த பருப்பு வகைகளின் ஆங்கில பெயர்களுக்கான தமிழ் பெயர்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பருப்புகளில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் போலேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நமது சீரான உடல் நலத்திற்கு மிகவும் தேவையான சத்துக்கள் ஆகும். குறிப்பாக உடலின் தசை வளர்ச்சிக்கும், சீரான ரத்த அழுத்தத்திற்கும், எலும்புகள் மற்றும் உடலின் வலிமைக்கும் இன்றியமையாததாக பருப்புகளில் உள்ள இந்த சத்துகள் திகழ்கின்றன.
பருப்பு வகைகள் பெயர்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு பருப்பு வகைக்கும் அந்த பருப்பிற்குரிய ஆங்கில பெயரை தெரிந்துகொள்ளலாம்.
பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில் – Paruppu vagaigal peyargal
| பருப்பு வகைகள் பெயர்கள் | Paruppu vagaigal English name |
|---|---|
| பிஸ்தா பருப்பு | Pistachio |
| அக்ரூட் பருப்பு | Walnut |
| மைசூர் பருப்பு | Red lentil |
| துவரம் பருப்பு | Split red gram |
| சிவப்பு பீன்ஸ் | Red kidney beans |
| சோளம் | Corn |
| நரிப்பயிறு | Moth beans |
| வருத்த கைகுத்தல் பாசிப்பருப்பு | Roasted hand processed moong dhal |
| உடைத்த கருப்பு உளுந்து | Split urad dhal |
| கருமொச்சை | Black butter beans |
| வேர்க்கடலை | Ground nut |
| முந்திரி பருப்பு | Cashew nut |
Paruppu vagaigal name in Tamil – பருப்பு வகைகள்:
| பருப்பு வகைகள் பெயர்கள் - Pulses in Tamil | Paruppu Vagaigal Name in English |
|---|---|
| கடலைப்பருப்பு | Bengal Gram |
| உளுத்தம் பருப்பு | Urad gram/Black gram |
| பயத்தம் பருப்பு /பாசிப்பருப்பு | Moong Dal |
| காராமணி | Black eyed pea |
| கருப்பு கொண்டை கடலை | Black chick pea |
| பச்சை கொண்டை கடலை | Green - black chick pea |
| வெள்ளை கொண்டை கடலை | White chick pea |
| தட்டை பயிறு | Cow peas |
| மொச்சைப் பயிறு | Field beans/ lima beans |
| ஆளிவிதை | Flax seed |
| பச்சை பட்டாணி | Green peas |
| மொச்சகொட்டை | Hyacinth beans |
| கொள்ளு | Horse gram |
| பாதாம் பருப்பு | Almond |
உலக அளவில் பார்த்தோமானால் எத்தனையோ பருப்பு வகைகள் (Types of dals in Tamil) இருக்கின்றன. பருப்பு சம்மந்தமான உணவுகளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் உட்கொண்டு வருகின்றனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர்.
வளரும் குழந்தைகளுக்கு பருப்பு வருகைகள் (Types of paruppu in Tamil) கொண்டு தயார் செய்த உணவுகளை சரியான விகிதாச்சார முறையில் கொடுத்து வருவதன் மூலம் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏதுவாக அந்த உணவுகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள் (Pulses varieties in Tamil / Paruppu vagaigal list) குறித்த தகவல் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இனி நீங்கள் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்கும்போது பருப்பு வகைகளை ஸ்டைலாக ஆங்கிலத்திலேயே கூறி வாங்கலாம்.