ஒரு கப் பாசிப்பருப்பு இருந்தா ரொம்பவே சுவையான இந்த ஸ்வீட்டை செஞ்சு பாருங்க. வாயில் வைத்தால் அப்படியே கரைந்து விடும் அந்தளவுக்கு சூப்பரான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

pasiparuppu halwa
- Advertisement -

வீட்டில் ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்றால் கேசரி பாயாசம் போன்ற எளிமையான உணவுகளை தான் முதலில் செய்வோம். இதற்கு காரணம் இது சுலபத்தில் செய்து விடக் கூடியது அது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். இத்துடன் இதற்கு அதிக நேரமும் தேவைப்படாது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் இது போன்றதொரு எளிமையான ஸ்வீட் ரெசிபியை வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இதை செய்வதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் 1 கப் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறி வாசம் வரும் வரை வறுத்தப் பிறகு இந்த பருப்பை ஒரு தட்டில் தனியாக கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதே பேனில் 3 டேபிள் ஸ்பூன் ரவையை நிறம் மாறும் வரை வறுத்து அதையும் தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் 10 முந்திரி பருப்பு, 3 ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏற்கனவே வறுத்து ஆற வைத்து பாசிப்பருப்பையும் இத்துடன் சேர்த்து நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்து இதை ஒரு பௌலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த பௌலில் ஏற்கனவே வறுத்து வைத்த ரவையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணியாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் நாம் கரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவை ஊற்றி கை விடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும். பாசிப் பருப்பு தண்ணீர் மொத்தமாக சுண்டி வெந்து வரும் போது 2 கப் சர்க்கரை சேர்த்துக் இத்துடன் கொஞ்சமாக ஃபுட் கலர் தண்ணீரில் கலந்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதையும் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மீதமான சாதத்தில் மொறு மொறு தோசையா? இது தெரிஞ்சா இனி தோசை மாவு காலியானலும் வருத்தப்படவே வேண்டாமே!

இதில் கடைசியாக முந்திரிப் பருப்பு மேலும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விட்டால் இது அல்வா பதத்திற்கு மாறி கடாயில் ஒட்டாத அளவிற்கு சுருண்டு வரும் தான் சரியான பதம். இந்த நேரத்தில் மேலும் 1 ஸ்பூன் நெய்யை ஊற்றிய இறக்கி விடுங்கள். நல்ல கமகம வாசத்துடன் சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.

- Advertisement -