இட்லி வேகுவதற்குள் 10 நிமிடத்தில் இந்த இட்லி சாம்பாரை செய்து முடித்து விடலாம்.

tiffen-sambar
- Advertisement -

இட்லி மாவு இருக்கு. ஆனா சைடிஸ் எதுவுமே இல்ல. இட்லியை வார்த்து அடுப்பில் வைத்து விட்டு இட்லி வேகக்கூடிய 10 நிமிடத்தில் மணக்க மணக்க இந்த பாசிப்பருப்பு சாம்பாரை வைத்து பாருங்கள். இட்லிக்கு மேலே ஊற்றி சாப்பிட்டால் இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். பாசிப்பருப்பு உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பருப்பு வகை தான். இதில் அருமையான டிபன் சாம்பார் 10 நிமிடத்தில் எப்படி வைப்பது தெரிந்து கொள்வோம் வாருங்கள். சுட சுட இட்லி, சுடச்சுட இந்த சாம்பாருக்கு நாலு இட்லி கூடுதலாக உள்ளே இறங்கும் என்றால் பாருங்கள்.

1/2 கப் அளவு பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி குக்கரில் போட்டுக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி விடுங்கள். இதில் நீளமாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 2, பச்சை மிளகாய் – 2, சாம்பார் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 4, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலந்து விட்டு குக்கரை மூடி, 2 விசில் வைத்தால் பருப்பு நன்றாக வெந்து இருக்கும். வெந்த பருப்பை ஒரு மத்து வைத்து மசித்து கொள்ளுங்கள். பாசிப்பருப்பு ஆங்காங்கே தெரிந்தால் தவறு கிடையாது. சாப்பிட சுவையாக தான் இருக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2 தாளித்து குக்கரில் வெந்த பருப்பை தாளிப்பில் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, மேலே கொத்தமல்லி தலையை தூவி, லேசாக கொதிவிட்டு அடுப்பை அணைத்தால் சூப்பரான டிபன் சாம்பார் தயார்.

சுட சுட இட்லிக்கு மேலே இந்த சாம்பாரை ஊற்றி அப்படியே பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். 10 இட்லி நிச்சயம் பத்தாது. இட்லி அல்லாமல் தோசை பொங்கல் பணியாரம் இவைகளுக்கும் தொட்டுக்கொள்ள இந்த சைட் டிஷ் நன்றாகத் தான் இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு சாம்பார் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

பின்குறிப்பு: மேலே சொன்ன குறிப்பில் பாசிப்பருப்பு சாம்பார் வைக்க பாசிப்பருப்பை வறுக்காமல் தான் சேர்த்திருக்கின்றோம். ஆனால் உங்களுடைய வீட்டில் நீங்கள் முன்கூட்டியே பாசிப்பருப்பை வறுத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்திருந்தால் அந்த பாசிப்பருப்பில் செய்தாலும் இந்த சாம்பார் மிக மிக சுவையாக தான் இருக்கும். பொன்னிறமாக வறுத்து பாசிப்பருப்பை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பில் சீக்கிரம் வண்டு புழு பிடிக்காமலும் இருக்கும்.

- Advertisement -