எந்த கிழமையில் பசுவிற்கு, என்ன தானம் கொடுத்தால், என்ன பலன்கள் தெரியுமா? இது தெரிஞ்சு தானம் கொடுங்க, நீங்கள் இதுவரை பட்ட துன்பங்கள் யாவும் உடனே தொலையும்!

cow-dhanam-lakshmi
- Advertisement -

பொதுவாக பசு தெய்வம்சமாக கருதப்படுகிறது. பசுவில் மும்மூர்த்திகளும், தேவர்களும், நவகிரகங்களும் அடங்கியுள்ளதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பசுவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு தெய்வ அம்சம் நிரம்பியுள்ளன. இதனால் பசுவை வணங்குபவர்களுக்கு எல்லா தெய்வங்களுடைய ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அத்தகைய மகிமை வாய்ந்த பசுவிற்கு எந்த கிழமையில்? என்ன தானம் செய்தால், என்ன பலன் கிடைக்கும்? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பயனுள்ள தகவல்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பசுவிற்கு தானம் செய்வதால் பித்ரு தோஷம் தொலையும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் மறைக்க முடியாத உண்மை ஆகும். காக்கைக்கு எப்படி உணவு வைத்து பித்ரு தோஷம் கழிக்கிறோமோ, அதே போல பசுக்களுக்கு தானம் செய்வதாலும் பித்ரு தோஷங்கள் தொலைகின்றன. அந்த வகையில் பசுவிற்கு அமாவாசை அன்று அகத்திக்கீரை கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கக்கூடிய நாட்களில் வெவ்வேறு பலன்களும் அடங்கியுள்ளன. பித்ரு உடைய சாபங்கள் நீங்க அமாவாசையில் தவறாமல் ஒவ்வொரு முறையும் கர்த்தாவின் கைகளினால் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வர வேண்டும்.

- Advertisement -

அதே போல பசுவிற்கு வெள்ளிக்கிழமையில் அகத்திக்கீரை கொடுத்து வந்தால் பணத்தட்டுப்பாடு குறையும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து பாருங்கள், உங்களுடைய துன்பத்திற்கு ஒரு முடிவு பிறக்கும். அது மட்டுமல்லாமல் பசுவிற்கு பச்சரிசியில் வெல்லம் கலந்து தானம் கொடுக்கலாம். இதுவும் வறுமையை போக்கி, செழிப்பான வாழ்க்கையை கொடுக்கும், நற்பலன்களை அள்ளித் தரும் ஒரு தானம் ஆகும்.

பசுக்களுக்கு சனிக்கிழமைகளில் அகத்திக்கீரை தானம் கொடுத்து வந்தால், சனி தோஷங்கள் விலகி செல்லும் என்கிற பலன்களும் உண்டு. சனி தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை தோறும் தவறாமல் பசுக்களை தேடிச் சென்று அகத்திக் கீரையை தானம் கொடுத்து வாருங்கள். தோஷம் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும். அவர்களுக்காக மற்றவர்கள் செய்தால் பலனில்லை.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையில் பசுக்களுக்கு வாழைப்பழமும், அகத்திக் கீரையும் கொடுத்து வந்தால் வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் என்று சிக்கல்களில் மாட்டியுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்டு வெற்றியை அடையக்கூடிய நற்பலன்களை பெறுவார்கள். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பவர்கள், நீண்ட காலமாக குற்ற உணர்ச்சிகளில் இருந்து மீண்டு வர முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையில் சென்று பசுக்களுக்கு இந்த தானங்களை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு ஒரு மாற்றமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும்.

இதையும் படிக்கலாமே:
வெண்கடுகை வீட்டில் இப்படி வைத்தால், வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வீட்டுக்குள் நுழையாது. கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வரை நம் வீட்டுக்குள் வர பயப்படும்.

பசுக்களை தானம் செய்வது அந்த காலங்களில் எல்லாம் மிகப்பெரிய தானமாக கருதப்பட்டு வந்தது. பலரும் கோவில்களுக்கு பசுக்களை கன்றுடன் தானம் செய்வது உண்டு. இன்றளவிலும் இது போன்ற தானங்கள் செய்து வருகிறார்கள். பசுக்களுடன் கன்றை தானம் செய்யும் அளவிற்கு நீங்கள் வசதி படைத்தவர்களாக இருந்தால் சகல தோஷங்களும் கழிய, பிரச்சனைகள் மறைய, துன்பங்கள் தொலைய பசுவுடன் கன்றை சேர்த்து தானம் கொடுத்து பயனடையலாம். இந்தந்த கிழமைகளில் மட்டுமல்ல உங்களால் முடிந்த பொழுது எல்லாம் பசுக்களுக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்து வந்தால் இதுவரை தீரவே தீராது என்று நினைத்த துன்பங்களும் நிச்சயம் தொலையும்.

- Advertisement -