பாத வெடிப்பை சரி செய்ய சுலபமான வழி

foot
- Advertisement -

நம்மில் பெரும்பாலானோர் உடலில் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்திற்கு கொடுப்பதில்லை. முகத்தை அழகுப்படுத்த மணி கணக்கில் நேரத்தை செலவிடும் நாம் நம்முடைய பாதங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நம்முடைய உடலில் மொத்த பாரத்தையும் தாங்கக் கூடியது இந்த பாதம் தான். அதை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால் அதுவும் நாளடைவில் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

பாத வெடிப்பு சரி செய்ய
பாதங்களை பராமரிப்பது எனில் முதலில் நாம் பாதங்களை வெடிப்புகள் இல்லாமல் நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். இந்த வெடிப்பானது ஆரம்பத்தில் பித்த வெடிப்பு போல லேசாக வர ஆரம்பிக்கும். அதன் பிறகு இதுவே பெரிய அளவில் உருவெடுத்து வெடிப்புகளில் இருந்து ரத்தம் வடிந்து பாதத்தை தரையிலே வைக்க முடியாத அளவிற்கு மோசமாகி விடும்.

- Advertisement -

இது வராமல் தடுக்க ஆரம்பம் முதலில் நாம் பாதத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பாதத்தை மிதமான சுடுதண்ணீரில் உப்பு மஞ்சள் கலந்து அதில் சிறிது நேரம் வைத்திருந்து அதன் பிறகு தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இதை வாரம் ஒரு முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். அதே போல் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து லேசாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். இது பாதத்தில் வெடிப்பு வராமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

பாத வெடிப்பு சரியாக நாம் வீணாக தூக்கிப் போடும் வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். அதை வைத்து நம்முடைய பாதங்களை அழகாக மாற்றலாம். இதை செய்வதற்கு முன்பாக பாதத்தை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு மஞ்சள் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உங்கள் பாதம் முழுவதும் அளவிற்கு உள்ள பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கால்களை சிறிது நேரம் வைத்திருந்து ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு கோல்கேட் பேஸ்ட் வெள்ளை நிறத்தில் உள்ளதை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் அளவு கிளாசரின் எடுத்துக் கொள்ளுங்கள். இது இரண்டையும் ஒரு குச்சி வைத்து கலக்குங்கள். அடுத்து நாம் சாப்பிட்டு கீழே தூக்கிப் போடும் வாழைப்பழத் தோலை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்கள் பாதத்தில் தேய்த்து அதன் பிறகு வாழைப்பழத் தோலை வைத்து சிறிது நேரம் அப்படியே மசாஜ் போல தேய்த்துக் கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் முகம் சிவப்பாக மாற

இந்த முறையை இரவு உறங்கும் போது தான் செய்ய வேண்டும். இதை தேய்த்த பிறகு கால்களை சுத்தம் செய்யாமல் விட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து கால்களை துடைத்து பாருங்கள் மேலிருக்கும் இறந்த செல்கள் எல்லாம் உதிர்ந்து வெடிப்புகள் மறைந்து இருப்பதை நீங்களே கண்கூட காணலாம். இந்த முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் போதும் பாத வெடிப்பு சுத்தமாக மறைந்து விடும்.

- Advertisement -