சுவையான, சூப்பரான, சிம்பிளான பாவக்காய் ஃபிரை ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. பாவக்காயே பிடிக்காதவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க.

pavakkai-fry
- Advertisement -

பாவக்காய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவார்கள். காரணம் அதில் இருக்கும் கசப்புத்தன்மை தான். ஆனால் கொஞ்சம் பக்குவமாக உப்பு காரம் கூடுதலாக சேர்த்து பாகற்காயை சமைத்தால் அதில் இருக்கும் கசப்புத்தன்மை அவ்வளவாக நமக்கு தெரியாது. பக்குவமாக பாவக்காய் ஃபிரை எப்படி செய்வது என்ற ரெசிபி உங்களுக்காக.

pavakkai

முதலில் 200 கிராம் அளவு பாவக்காய்களை எடுத்து கழுவி கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பாவாக்காய்கள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடிகனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து, தாளித்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் பொறித்து வந்ததும் மீடியம் சைஸ் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக வெட்டி, கடாயில் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

pavakkai-fry1

வெங்காயம் வதங்கியவுடன் வெட்டி வைத்திருக்கும் பாகற்காயை கடாயில் சேர்த்து, பாவக்காய்க்கு தேவையான உப்பு தூளைத் தூவி, பாவக்காய்களை வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பாவக்காய் பாதி வெந்து வரவேண்டும். நினைவில் இருக்கட்டும். பாவகாய் பாதி வெந்தவுடன் மிளகாய்தூள் ஒரு டேபில் ஸ்பூன், மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, இந்த எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். பாவக்காய் அப்படியே கடாயில் வறுபட வேண்டும். இடையிடையே கரண்டியை வைத்து பாகற்காயை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

- Advertisement -

இந்தப் பாவக்காயை தண்ணீர் ஊற்றி வேக வைக்கக்கூடாது. பாவக்காய் அப்படியே எண்ணெயில் தான் ஃபிரையாக வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாவக்காய் வறுக்கவேண்டும். அடுப்பு சிம்மிலேயே இருக்க வேண்டும். பாவக்காய் போட்டிருக்கும் வெங்காயம் எல்லாம் வறுபட்டு கருப்பு நிறத்தில் வந்தவுடன், அடுப்பை அனைத்து விட்டு, இதை ருசித்துப் பாருங்கள். பாவக்காய் ருசி அருமையாக இருக்கும்.

pavakkai-fry2

ரசம் சாப்பாடு, தயிர் சாப்பாடு, சாம்பார் சாதத்திற்கு, தொட்டுக்கொள்ள அட்டகாசமான ரெசிபி இது. சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த ஃபிரையை போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரு வாட்டி உங்க வீட்ல இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -