இந்த மூன்று எளிமையான தானத்தை மட்டும் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் தலைமுறையை பாதிக்கும் பாவங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உங்கள் குடும்ப முன்னேற்ற நிலைக்கு செல்லும்

cow-dhanam
- Advertisement -

ஒரு மனிதனின் தனது வாழ்க்கையில் பொன், பொருள், சொத்து இவற்றுடன் நல்ல நிலையை அடைந்துவிட்டான் என்றால் அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரும் அவனைப் புகழ ஆரம்பிப்பார்கள். நீ செய்த புண்ணியம்தான், உனது பெற்றோர்கள் செய்த புண்ணியம்தான் இவ்வாறான வாழ்க்கையை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உங்கள் குடும்பமே மற்றவர்களுக்கு உதவி செய்து புண்ணியத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று அவர்களை புகழ்ந்து தள்ளுவார்கள்.

அதுவே நன்றாக வாழ்ந்த ஒருவன் வியாபாரத்திலோ அல்லது தொழிலிலோ ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அவனது வாழ்க்கை தடுமாறிப் போய் விட்டது என்றால் நீ செய்த பாவம் தான், உன் குடும்பம் செய்த பாவம் தான் நீ இந்த துன்பத்தை அனுபவிக்கிறாய் என்றும், அதுமட்டுமல்லாமல் உன் தலைமுறையே இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் என்று அவர்களை திட்டி கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு செய்ய வேண்டிய எளிய தானத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நமது முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அதில் நமக்கு நன்மை தரும் பல விஷயங்கள் அடங்கி இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் ஆராயாமல் இப்பொழுது இருக்கும் அவசர காலத்தில் அனைத்தையும் தூக்கி எறிந்து நமக்கு இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முந்தைய காலத்தில் எல்லாம் நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் காலை எழுந்தவுடன் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து அரிசி மாவு கோலம் போடுவார்கள். இவ்வாறு செய்வதென்பது வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இந்த அரிசி மாவினை எறும்புகள், பறவைகள், ஈக்கள் உண்டு அவற்றின் பசியை ஆற்றிக் கொள்வதற்காகத் தான். இவ்வாறு உயிரினங்கள் தங்கள் பசியை தீர்த்துக் கொள்வதற்கு நாம் கொடுக்கும் இந்த சிறிய உணவு நமது தலைமுறையையே தழைக்க வைக்கும்.

- Advertisement -

எனவே இப்பொழுதெல்லாம் அரிசி மாவு கோலம் போட முடியா விட்டாலும் சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரையை வீட்டின் வாசலில் அல்லது மொட்டை மாடியில் சிறிதளவு போட்டு வையுங்கள். இவ்வாறு சிறிய உயிரினங்கள் இதனை சாப்பிடும் பொழுது நமக்கு பல புண்ணியத்தை சேர்க்கின்றன.

அதுபோல தினமும் வடிக்கின்ற சாதத்தில் சிறிதளவு சாதத்தை காக்கைக்கு படைத்து வருவது நமது குடும்பத்தை பாதித்துக் கொண்டிருக்கும் எந்தவித பாவமாக இருந்தாலும் அவற்றை தீர்த்து புண்ணியம் சேர்க்கிறது. நமது முன்னோர்களான பித்ருக்கள் காக்கையின் வடிவத்தில் இந்த உணவை சாப்பிட்டு நமக்கு வரக்கூடிய துன்பத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றி வழிநடத்திச் செல்வார்கள்.

அடுத்ததாக இரவு படுக்கும் முன்பு ஒரு கைப்பிடி சாதத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, இந்த சாதத்தையும் அதன் பக்கத்தில் ஒரு சொம்பு தண்ணீரையும் வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். நம் வீடு தேடி வரும் ஐஸ்வர்ய தேவதைகள் நமது வீட்டை சுற்றி பார்த்து அவர்களின் பசியாற இந்த உணவை எடுத்துக் கொள்வார்கள். பின்னர் காலை இந்த உணவை காக்கைக்கு வைத்துவிட்டால் போதும். இவற்றின் மூலம் நமது கண்ணுக்குத் தெரியாத பாவங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றில் இருந்து விடுபட்டு நமது குடும்பம் மகிழ்ச்சியாக வாழ நல்ல வழி பிறக்கும்.

- Advertisement -