எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லையா? பல ஜென்மத்து கர்மாக்கள் கழிய இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

dhanam1

எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லை. உழைக்கும் உழைப்பு, எடுக்கும் முயற்சி எல்லாமே தோல்வியில் முடிகின்றது. உடம்பு முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு என்னதான் மண்ணில் புரண்டு எழுந்தாலும், ஓட்டுவதுதான் ஒட்டும். கர்மவினைகளை செய்துவிட்டு, எவ்வளவு உழைத்தாலும் நமக்கு என்ன கிடைக்க வேண்டுமென்று இருக்கின்றதோ, அது தான் கிடைக்கும். அறியாமல் தெரியாமல் செய்தது கர்மவினைகள். நாம் எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்ததற்காக இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பது நமக்கே தெரியாது. இருப்பினும் அந்த பாவத்தை எப்படி கழிப்பது? அறியாமல் செய்த பாவங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போக, நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகார முறைகள் ஏதேனும் உண்டா? நிச்சயம் உண்டு. அதற்கான வழிமுறைகளைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pichai-thanam

உதவி, இந்த உதவி என்ற மூன்று எழுத்து வார்த்தை, முன்பு செய்த மூன்று தலைமுறைகளுடைய பாவத்தைப் போக்கக் கூடியது. நமக்கு அடுத்து வரக்கூடிய மூன்று தலைமுறைக்கு புண்ணியத்தை சேர்ப்பது. ஆனால் ஏனோ மனம் விரும்பி இந்த உதவியை யாரும் யாருக்கும் செய்வதே கிடையாது. இயன்றவரை, இயன்றவர்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அடுத்தவர்களுடைய உதவியை மட்டும் எதிர்பார்த்து வாழும் உயிர்கள் ஏராளம். அவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய இயலாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும்.

annathanam

குறிப்பாக வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை இந்த மூன்று கிழமைகளில் உங்கள் வீட்டில், உங்கள் கைகளால் சமைத்த உணவு பொருட்களை பசியோடு இருப்பவர்களுக்கு, உங்கள் கைகளால் தானம் கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மீதமான சாதத்தை கொடுப்பது என்பது வேறு. உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே இஷ்டப்பட்டு சமைத்து அதை உங்கள் கைகளால் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் அல்லது வேறு ஏதாவது இடத்தில் புறாக்களின் வருகை இருந்தால் அந்தப் புறாக்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை, தனியா போன்ற தானியங்களை இறையாக வைப்பது நமக்கு நிறைய புண்ணியங்களை சேர்க்கும். உங்கள் வீட்டில் என்ன தானியவகை இருக்கின்றதோ அதை கொண்டு போய் புறா வரும் இடத்தில் வைத்தால் போதும். புறாக்களுக்கு உணவளிப்பது பூர்வஜென்ம சாபத்தை போக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

white-bird

இறுதியாக ஒரு விஷயம். இது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. இதை எத்தனை பேர் செய்வார்கள் என்றும் தெரியாது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள். அந்தப் பாம்பை அடிக்கக் கூடாது. அந்த பாம்பை அடித்தால் குறிப்பாக நல்ல பாம்பை அடிப்பது நமக்கு பாவத்தை சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

snake

ரோட்டிலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ பாம்பு இறந்திருந்தால், அதாவது எதிர்பாராதவிதமாக வண்டிகளின் மிதி பட்டு அல்லது வேறு யாராவது அடித்தோ, அப்படியே தூக்கி ரோட்டில் வீசி இருந்து அதை நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த பாம்பை முறையாக எடுத்தது கொஞ்சம் மண்ணைத் தோண்டிப் புதைத்து அந்த மண்ணின் மேல் கொஞ்சமாக பாலை ஊற்றி இறுதி சடங்கை முறையாக முடிக்கும் பட்சத்தில் உங்களுடைய ஏழேழு ஜன்மத்து பாவமும் தூள் தூளாகி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

annathanam

இது மிகவும் அரிதான விஷயம்தான். இருப்பின் சந்தர்ப்பம் கிடைத்தால் இதை செய்து உங்களுடைய பாவத்தை கழித்துக் கொள்ளலாம். அந்த பாம்பு இறந்து விட்டதா என்று ஒன்றுக்கு பலமுறை சோதித்து விட்டு அதன் பின்பு இதை நீங்கள் செய்ய வேண்டும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.