உங்கள் வீட்டு சிலிண்டர் லீக்கேஜ்யை கண்டு பிடிக்க எளிய வழி. இது போன்ற ஐந்து அருமையான டிப்ஸ், என்னென்ன பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

நம் வீட்டில் சமையலறை வேலை சுலபமாக செய்ய சின்ன சின்ன குறிப்புகள் நிறைய உள்ளது. அதில் சில குறிப்புகளை தான் இப்போது நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த குறிப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக மட்டும் அல்ல முக்கியமானத்தாகவும் இருக்கும். இவ்வளவு சின்ன விஷயங்கள் கூட நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று யோசிக்கும் அளவிற்கு ஒவ்வொரு டிப்ஸும் இருக்கும். வாங்க அது எந்த மாதிரியான டிப்ஸ் என்று தெரிந்து கொள்வோம்.

உங்கள் வீட்டில் சிலிண்டர் லீக்கேஜ் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். அப்படி லீக்கேஜ் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். அதாவது உங்கள் சிலிண்டர் மேலே உள்ள ஓபனர் பகுதியில் சிறிது தண்ணீர் ஊற்றுங்கள், தண்ணீரில் பபுள்ஸ் போல் வந்தால் உங்கள் சிலிண்டர் லீக்கேஜ் ஆகிறது என்று அர்த்தம். அப்படி ஏதும் வரவில்லை என்றால் சிலிண்டரில் லீக் இல்லை, அதன் பிறகு நீங்கள் ஒரு காட்டன் துணி வைத்து தண்ணீரை ஒற்றி எடுத்து விட்டு சிலிண்டரை உபயோகிக்கலாம். இதை மட்டும் எப்போதும் கவனமாக கையாளுங்கள். இல்லை பெரும் ஆபத்துதாகி விடும் . இது மிகவும் பயனுள்ள அதே நேரம் முக்கியமான ஒரு குறிப்பு.

- Advertisement -

முட்டை வேக வைத்து எடுத்த பிறகு அதன் ஓட்டை உரிக்க நாம் காத்திருக்க வேண்டும். இனி அப்படி காத்திருக்க வேண்டியது இல்லை. வேக வைத்த முட்டைகளை எடுத்து தண்ணிரில் போட்ட பிறகு கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். முட்டை ஓடு ரொம்ப ஈஸியா உங்களுக்கு முட்டையோட சேர்ந்து வராமல் அழகா தனியாக வந்து விடும் நேரமும் மிச்சமாகும்.

அதே போல தோசை ஊற்றும் போது கல் சில சமயம் அதிக சூடாகி தோசை வராது. அதுக்கு இந்த ஐஸ் கட்டியை ஒரு காட்டன் துணியில் வச்சு கல் மேல தேய்த்தால், உடனே கல் நார்மல் சூட்டிற்கு வந்து விடும். அடுத்த தோசை நன்றாக ஊற்ற வரும்.

- Advertisement -

வீட்லில் அசைவம் சமைத்த பிறகு அந்த வாடை போக ஒரு இரண்டு ரூபாய் காப்பித்தூள் எடுத்துக் கொள்ளுங்கள். அதை வெறும் சட்டியில் போட்டு சிறிது நேரம் வாசம் வரும் வரை வறுத்தால் அசைவம் சமைத்த வாடையே உங்கள் வீட்டில் இருக்காது. நீங்கள் அசைவம் சமைத்தேன் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டர்கள்.

இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம், சிங்க் இப்படி எல்லா வற்றையும் கை வலிக்காமல் ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்ய இந்த, 1 பவுடர் போதும்.

இனி நீங்கள் சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் போது, ஒரு கிலோ கோதுமைக்கு அரை கிலோ சோயா சேர்த்து அரைத்துப் பாருங்கள் .கடை மாவில் செய்யும் சப்பாத்தியை விட அதிக சாஃப்ட்டாக இருக்கும். இந்த குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயன் தர கூடியவை தான். நீங்களும் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

- Advertisement -