செல்லும் பயணம் தடை இல்லாமல் வெற்றி பெற 9 மிளகை இப்படி செய்து விட்டு வீட்டை விட்டு கிளம்புங்க!

murugan-milagu
- Advertisement -

ஓரிடத்திற்கு நல்ல விஷயத்திற்காக, நல்ல செய்திக்காக பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், அந்த விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செல்வோம். அந்த வகையில் தடையில்லாத பயணம் வெற்றி அடைய மிளகை வைத்து சிறு பரிகாரமும் செய்வது உண்டு. அது என்ன பரிகாரம்? அதனை எப்படி செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நீண்ட நாள் ஆசைப்பட்ட வேலை ஒன்று கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியில் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், இந்த பரிகாரத்தை தாராளமாக நீங்கள் செய்துவிட்டு கிளம்பலாம். இதனால் தடை இல்லாத வெற்றியடைவீர்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

நீண்ட காலமாக ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை, இந்த வரன் எப்படியும் அமைந்துவிடும் என்கிற நம்பிக்கையில் கிளம்புகிறீர்கள் என்றால், அந்த பயணத்தை வெற்றிகரமாக மாற்றி அமைக்கவும் இந்த எளிமையான பரிகாரத்தை நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் முன்பு செய்துவிட்டு கிளம்பலாம். இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் நம் வாழ்வில் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்.

நாம் மேற்கொள்ளக் கூடிய எல்லா பயணங்களும் முக்கியமானது என்று இல்லை என்றாலும், சில பயணங்கள் நமக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய பயணங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆன்மீக ரீதியாக இது பெரும் பலன் தருவதாகவும் நம்பிக்கை உண்டு.

- Advertisement -

வீட்டை விட்டு கிளம்பும் முன்பு வெளியில் வந்து கொள்ளுங்கள். இதை வெளியில் வைத்து தான் செய்ய வேண்டும். வீட்டிற்குள் செய்யக்கூடாது. வீட்டை எல்லாம் பூட்டிவிட்டு, நீங்கள் வெளியில் வந்த பிறகு 9 மிளகுகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கையில் இருக்கும் இந்த ஒன்பது மிளகுகளில் நான்கு மிளகினை நான்கு திசைகளை பார்த்து தூக்கி வீசியடிக்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் ஒவ்வொரு மிளகுகளை தூக்கி எறிந்து விட்ட பின்பு, வடகிழக்கு, தென்மேற்கு, வட மேற்கு, தென்கிழக்கு ஆகிய மீதம் இருக்கும் நான்கு திசைகளிலும் இருக்கக் கூடிய நான்கு மிளகுகளை இதே போல தூக்கி விசிறி அடித்து விடுங்கள். கடைசியாக உங்க கையில் ஒரு மிளகு இருக்கும். இந்த மிளகினை நீங்கள் வான்நோக்கி தூக்கி விசிறி அடிக்க வேண்டும். அது எந்த திசையில் சென்று விழுந்தாலும் பரவாயில்லை.

இதையும் படிக்கலாமே:
இரவில் இதை மட்டும் செய்தால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்களை எளிதாக வீழ்த்தி விடலாம் தெரியுமா?

இப்படி ஒன்பது மிளகுகளையும் ஒன்பது விதங்களில் தூக்கி எறிந்து விட்டு பின்னர் கையை அலம்பி கொள்ளுங்கள். இப்போது வீட்டை விட்டு நீங்கள் நல்ல எண்ணத்துடன் கிளம்பினால் போதும், நீங்கள் செல்லக் கூடிய பயணம் ஆனது தடை இல்லாமல் வெற்றி பெறும். பயண வெற்றிக்கு இதை விட சிறந்த எளிய பரிகாரம் இருந்து விட முடியாது. நீங்கள் முக்கியமான காரியத்திற்காக செல்கிறீர்கள் என்றால், இதை செய்து பார்த்து விட்டு சென்று பாருங்கள், அமோகமான பலன்களை கொடுக்கும். வெற்றிக்கான பயணம் மட்டுமல்ல, அதிகமான லாபம் காணக் கூடிய பயணமாகவும் இது அமையும்.

- Advertisement -