இவ்வளவு வருஷமா சமைக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட டிப்ஸ் எல்லாம் இதுவரைக்கும் யோசித்து கூட பார்த்தது கிடையாது.‌‌ புத்தம் புதிய 5 சமையல் குறிப்புகள் உங்களுக்காக.

kitchen
- Advertisement -

சமைப்பதில் எவ்வளவு சீனியர் ஆக இருந்தாலும், சமையலறை பற்றிய சில குறிப்புகள் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரியாமல் இருக்கும். உங்களுக்கு இதுவரை தெரியாத புத்தம்புதிய சமையலறைக்கு தேவையான 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக தெரிந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

Kadugu

Tip No 1:
எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு போட்டால், அந்த கடுகு கட்டாயம் படபடவென பொரிந்து கீழே தெறிக்கும். சில சமயம் நம்மேல் கூட விழுந்துவிடும். இப்படி எண்ணெயில் போட்ட கடுகு சிதறாமல் பொரிவதற்கு என்ன செய்யலாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடாகும் போது ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை போட்டு விடுங்கள். அதன் பின்பு கடுகை எண்ணெயில் போட்டு தாளித்தால் கடுகு சிதறாமல் பொரியும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip No 2:
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால் நெய் எண்ணெய் ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை தேய்த்து சுத்தம் செய்வது தான். இப்படிப்பட்ட எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும் பாத்திரங்களை பல் தேய்க்கும் பேஸ்டை கொண்டு சுத்தம் செய்தால் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு நீங்கி விடும்.

ghee

Tip No 3:
சமையலறையில் அடுக்கி வைத்திருக்கும் மளிகை ஜாமான்களில் 1 கிலோ வாங்கி வைத்தாலும் வண்டு பிடிக்கிறது. 100 கிராம் அளவு வாங்கி வைத்தாலும் வண்டுபிடிக்கிறது. இந்த பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, ரவை, மைதா, இந்த பொருட்களை எல்லாம் பூச்சி வராமல் பாதுகாப்பது என்பது மிக மிக கஷ்டமான விஷயம்தான்.

- Advertisement -

இதற்க்கு ஒரு பெஸ்ட் டிப்ஸ். கொட்டாங்குச்சி, தேங்காய் துருவிய பின்பு, அந்த கொட்டாங்குச்சியை சிறு துண்டுகளாக உடைத்து வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்‌. அதில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. இந்த சின்ன சின்ன கொட்டாங்குச்சிகளை அரிசி மூட்டையில், பருப்பு போட்டு வைத்திருக்கும் டப்பாவில், மாவு வகைகள் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் அதில் பூச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வராதாம். இதனால்தான் அந்த காலத்திலேயே தேங்காய் நாரை எடுத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினார்களோ?

Coconut-shell

Tip No 4:
நம் வீட்டில் சமயத்தில் கொஞ்சம் அதிகமாக அப்பளம் பொரித்து விடுவோம். அடுத்த வேலைக்கு என்னதான் டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைத்தாலும் அது நமத்து போகத்தான் செய்யும். இப்படி காற்று புகாமல் டப்பாவில் போட்டு வைத்த அப்பளத்தை அந்தத் டப்பாவோடு அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு இரண்டு நாள் ஆனாலும் இப்போது பொரித்த அப்பளம் போல மொறுமொறுவென இருக்கும்.

appalam7

Tip No 5:
மழைக்காலம் கொஞ்சமாக முடிந்து, அடுத்து வரக்கூடிய காலங்களில் சிறிய சிறிய கொசுவின் தொல்லை, சமையலறையில் அதிகமாக இருக்கும். ஒரு சிறிய வாட்டர் கேனில் 1 மூடி ஹேண்ட் வாஷ், 1 மூடி கம்ஃபோர்ட், 1 டம்ளர் அளவு தண்ணீர், சேர்த்து நன்றாக குளிக்கி விட்டு இந்த வாட்டர் கேன் மூடியில் சிறிய ஓட்டை போட்டு மூடி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து சமையலறை மேடை, கேஸ் ஸ்டவ், இவைகளைத் துடைத்தால் ஈ கொசுத்தொல்லை இருக்காது.

plant-in-kitchen

இந்த ஸ்ப்ரேவை பாத்ரூமில் பயன்படுத்திக் கொள்ளலாம். வாஷ் பேஷன், டாய்லெட் எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீடு துடைக்கும் தண்ணீரில் ஊற்றி கலந்து, வீட்டைத் துடைத்தால், வீடு வாசமாக இருக்கும். அதே சமயம் சிறிய பூச்சி தொல்லைகள் இல்லாமலும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -