இனி குழம்பு மிளகாய்த்தூளை இப்படி பயன்படுத்தி பாருங்க, ஆறு மாசம் ஆனாலும் புதுசா அரைச்சா மாதிரியே இருக்கும். குழம்பும் நல்ல மணமா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

வீட்டு வேலைகளை செய்வதில் கூட அதிக சிரமம் இல்லாமல் சுலபமாக செய்து முடிக்க சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். நம் வேலைப்பளு பாதியாக குறைவதோடு டென்ஷனும் குறையும். இந்த வீட்டு குறிப்பு பதிவில் உள்ள டிப்ஸ்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்கள் வீட்டின் வேலைகளை சுலபமாக செய்து முடித்து விடலாம். வாங்க அது என்னென்ன குறிப்பு என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த குழம்புக்கு அரைக்கும் மிளகாய் தூளை மட்டும் நாம் அடிக்கடி அரைக்க மாட்டோம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என மொத்தமாக அறைத்து வைத்து விடுவோம். ஆனால் அரைக்கும் போது இருப்பதைப் போல அந்த தூளின் மணம் கடைசி வரை இருப்பதில்லை. அதற்கு ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. நீங்க தூள் அரைச்சிட்டு வந்த உடனே அதுல ஒரு அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து கலந்து வைத்து விட்டால் ஆறு மாதமானாலும் தூளில் நிறமும், மனமும் மாறாமல் புதிதாக அரைத்தது போலவே இருக்கும்.

- Advertisement -

பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களுடைய ஷூவை துவைத்து பராமரிப்பது பெரிய வேலை. ஷூவை அடிக்கடி துவைத்தால் சீக்கிரம் கிழிந்து விடும் எனவே மாலையில் பள்ளி முடிந்து வந்தவுடன் அதை ஒரு துணி வைத்து துடைத்த பிறகு, அதன் மேல் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டால் புதிது போல இருப்பது மட்டுமல்லாமல், ஷூவும் சீக்கரம் வெளுத்து போகாது.

நம் வீட்டில் பிரிட்ஜ்ஜை சுத்தம் செய்யும் போது வெளிப்புறங்களில் துடைத்து விடுவோம். உள்ளேயும் கூட காய்கறி, பொருட்கள் வைக்கும் இடங்களை எல்லாம் சுத்தம் செய்வோம் ஆனால் பிரிச்சின் டோரில் இருக்கும் பெல்ட்டை பெரும்பாலும் சுத்தம் செய்வது கிடையாது. ஆனால் அதில் தான் அதிகமான அழுக்கு படிந்து அதன் மூலம் உள்ளே இருக்கும் பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடும் வாய்ப்பு அதிகம். அதை சுத்தம் செய்ய ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடாவில் எலுமிச்சை பழ சாறை கலந்து அந்த தண்ணீரை பிரஷ்லில் தொட்டு சுற்றி தேய்த்து விட்டால் அதில் அழுக்கு படியாதொடு கிருமிகள் உருவாவதும் தடுக்கப்படும்.

- Advertisement -

இந்த பெல்டை சுத்தம் செய்வதுடன் அப்படியே விட்டு விடாமல், அதில் கொஞ்சம் வெண்ணையை எடுத்து பிரஷ் வைத்து பெல்ட்டை சுற்றிலும் தேய்த்து விட்டால் பிரிட்ஜின் பெல்ட் இளகி விடாமல் இருக்கும். அது மட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு இது பழுதாகாமலும் இருக்கும்.

இந்த பிரிட்ஜை பயன்படுத்துபவருக்கு இன்னொரு பெரிய பிரச்சனை ஃப்ரீசரில் ஐஸ் கட்டி விடுவது. இப்போது வரும் பிரிட்ஜில் பெரும்பாலும் இந்த பிரச்சனை இல்லை. ஆனால் கொஞ்சம் பழைய பிரிட்ஜ் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை இருக்கத் தான் செய்யும். அதற்கு ஒரு பவுலில் கொஞ்சம் உப்பு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதை ஒரு துணியில் நனைத்து அந்த துணியை வைத்து பிரீசரை கொண்டு துடைத்தால் பிரிசர் கட்டி ஆகவே ஆகாது.

- Advertisement -

ஒரு வேளை உங்கள் பிரிசரில் அதிகமான ஐஸ் கட்டிகள் அதிகமாக இருந்தால் அப்போது இப்படி துணி வைத்து துடைக்க முடியாது. அந்த நேரத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த உப்பை சேர்த்து நன்றாக கரைந்த பிறகு அதை பிரசர் உள்ளே வைத்து விடுங்கள். ஐஸ் கட்டிகள் அனைத்தும் இளகி வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: ஸ்டீல் ஸ்க்ரப்பரை வைத்து பாத்ரூமை தேய்த்து தேய்த்து கழுவி கையெல்லாம் வலிக்குதா? கை வலிக்காமல் பாத்ரூமில் இருக்கும் கறைகளை நீக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

இந்த பதிவில் உள்ள சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்கு சமயத்தில் பெரிய உதவியாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -