பழைய அடி இட்லி மாவை கூட, ஒரு நிமிடத்தில் புளிப்பு இல்லாமல் புதுசு போல மாற்றலாம். இந்த டிப்ஸ் தெரிந்தால்.

idli-mavu
- Advertisement -

ஒவ்வொரு முறை வீட்டில் புதுசாக இட்லி மாவு அரைக்கும் போது, அந்த மாவில் இட்லி தோசை சாப்பிட ரொம்பவும் ஆசையாக இருக்கும். அதுவே மாவு அடி மாவாகிவிட்டால், அந்த மாவை பயன்படுத்துவது மிக மிக சிரமம். அதில் இட்லி வார்த்தாலும் சரியாக வராது. தோசை சுட்டாலும் சரியாக வராது. இப்படி மிச்சமான, புளித்துப்போன அடி மாவை சுவையாக மாற்றி சாப்பிடுவது எப்படி என்பதை பற்றிய 2 குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த இரண்டு குறிப்புகளையும் நீங்கள் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து அடிமாவில் இந்த ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்

குறிப்பு 1:
ஒரு 5 லிருந்து 6 தோசை சுடும் அளவிற்கு அடி மாவு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை புளிப்பு வாசம் இல்லாமல், ஃபிரஷ் ஆன தோசைமாவாக மாற்ற சிறு குறிப்பு. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 1 1/2 ஸ்பூன், சர்க்கரை – 1/2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் உருக்கி இதோடு ஊற்றி நன்றாக கலந்தால், முட்டையை அடித்து வைத்தது போல நமக்கு ஒரு கலவை கிடைத்திருக்கும்.

- Advertisement -

இந்த கலவையை பழைய தோசை மாவோடு ஊற்றி நன்றாக அடித்து கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த மாவில் தோசை வார்த்து சாப்பிட்டு பாருங்கள். தோசை மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மாவு புளித்த வாடையும் வீசாது. வெண்ணெய் உங்களுடைய வீட்டில் இல்லை என்றால், 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ளலாம்.

குறிப்பு 2:
இதே போல ஒரு சிறிய கப்பில் 5 லிருந்து 6 தோசை வரும் அளவிற்கு பழைய புளித்த தோசை மாவு இருக்கிறது இதை வைத்து கோதுமை தோசை மொறுமொறுவென எப்படி சுடுவது என்பதையும் இப்போது பார்க்கலாம். பிசுபிசுப்பு இல்லாமல் மொறுமொறுப்பாக கோதுமை மாவு தோசை வேண்டும் என்றால் இப்படி செய்யலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 2 கப், ரவை – 3/4 கப், உப்பு தேவையான அளவு, சர்க்கரை – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரை ஓட விட்டால் நமக்கு தேவையான கோதுமை தோசை மாவு கிடைத்துவிடும். முதலிலேயே நிறைய தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவு பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். கட்டிகள் இல்லாமல் அரைத்த இந்த மாவை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த மாவோடு மீதமாக இருக்கும் 1 கப் புளித்த அடி தோசை மாவை ஊற்றி நன்றாக அடித்து கலந்தால் நமக்கு தேவையான சூப்பரான கோதுமை மாவு தயார். (தோசை மாவு இல்லை என்றாலும் அதை தவிர்த்து விட்டு, இதேபோல கோதுமை மாவு ரவையை வைத்து, கோதுமை தோசை சுட மாவு தயார் செய்யலாம். தோசை மாவுக்கு பதிலாக கொஞ்சமாக அரிசி மாவு இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தோசை கல்லின் சூட்டை தணித்துவிட்டு, அதன் பின்பு இந்த மாவை தோசை கல்லில் ஊற்றி மெல்லிசாக தேய்த்து, மேலே எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சிவக்க வைத்து விட்டு, திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான கோதுமை தோசை தயார்.

- Advertisement -