வேர்க்கடலையை வைத்து கொஞ்சம் புது விதமான சட்னி. 10 இட்லி தோசை இருந்தாலும் பத்தாது, இந்த வேர்க்கடலை சட்னி தொட்டுக்க இருந்தால்!

verkadalai-chutney
- Advertisement -

உங்க தட்டுல சுடச்சுட 10 இட்லி போட்டாலும், 10 தோசை போட்டாலும் அது எப்படித்தான் வயிற்றுக்குள் போனது என்றே தெரியாது. அந்த அளவிற்கு சுலபமாக சாப்பிட்டு விடலாம். காரசாரமான வாசனையான கலர்ஃபுல்லான ஒரு வேர்கடலை சட்னி, புதுவிதமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முற்றிலும் வித்தியாசமான சுலபமான அந்த வேர்கடலை சட்னி ரெசிபியை பார்த்து விடலாமா?

peanut

வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 6 லிருந்து 7, பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, தக்காளி – 1 பொடியாக நறுக்கியது, பூண்டு – 6 பல் தோல் உரித்தது, பெருங்காயம் – 2 சிட்டிகை, தேங்காய் ஒரு கைப்பிடி அளவு, 50 கிராம் – வருத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சீரகம், வரமிளகாய், போட்டு சிவக்க விட வேண்டும். அதன் பின் வெங்காயம் தக்காளி பூண்டு இவைகளை நன்றாக வதக்கி, பெருங்காயம் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு தேங்காய் சேர்த்து, வதக்க வேண்டும்.

peanut-chutney1

மொத்தமாக 6 லிருந்து 7 நிமிடங்கள் வதங்கியதும், இறுதியாக வறுத்த வேர்க்கடலையும் பொட்டுக்கடலை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த கலவை நன்றாக ஆரட்டும். அதன் பின்பு, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ரொம்ப மொழுமொழுவென்று அரைத்துக் கொள்ள வேண்டாம். 90 சதவிகிதம் அரைத்தால் போதும். நிறைய தண்ணீர் ஊற்றி அரைத்து விடக்கூடாது. வெங்காய சட்னி பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொண்டால் இதன் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

peanut-chutney

அரைத்த இந்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஒரு ஸ்பூன் எண்ணெய், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து சிறிய தாளிப்பு கொடுத்துவிட்டால், போதும். கமகம வாசத்தோடு கமகம சட்னி தயாராகியிருக்கும். சுடச்சுட இட்லி தோசைக்கு, வைத்து தொட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா அற்புதமான சுவை. உங்கள் வீட்டில் இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சட்டுனு 2 நிமிடத்தில் மிளகு சட்னியை செய்து விடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -