இனி இட்லிக்கு சாம்பார் செய்யும் போது இந்த காய் சேர்த்து சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க.

- Advertisement -

இந்த சாம்பார்ரை பொறுத்த வரையில் இட்லி தோசைக்கு ஒரு மாதிரியும் சாதத்திற்கு என்ன செய்யும் பொழுது வேறு வகையிலும் நாம் சாம்பார் வைப்போம் அப்படி அல்லாமல் இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய ஒரு சுவையான சாம்பார் அதுவும் மிகவும் சுலபமாகவும் டேஸ்டாகவும் செய்ய இந்த ஒரு காயை அதில் சேர்த்தாலே போதும் சாம்பாரின் சுவை அட்டகாசமாக இருக்கும். அது என்ன காய் எப்படி இந்த சாம்பார் வைப்பது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – 1, துவரம் பருப்பு – கால் கப், வெங்காயம் -1, பூண்டு பல் -10, பச்சை மிளகாய் – 5, தக்காளி – 4, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன், கடுகு -1 டீஸ்பூன், வெந்தயம் -1/4 டீஸ்பூன் , கருவேப்பிலை -1 கொத்து, காய்ந்த மிளகாய் -2, உப்பு -1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை 

இந்த சாம்பார் செய்ய முதலில் பீர்க்கங்காயை நன்றாக தோல் சீவி சுத்தம் செய்து ஒரு கப் அளவிற்கு வரும் படி சின்னதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் அதே போல் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சாம்பார் தாளித்து விடுவோம்.

குக்கரில் துவரம்பருப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு, பீர்க்கங்காய் சேர்த்த பிறகு நான்கு மீடியம் சைஸ் பழுத்த தக்காளியை அறிந்து அதையும் குக்கரில் சேர்த்து விடுங்கள். அடுத்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, சேர்த்த பிறகு ரெண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து விடுங்கள் மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு பருப்பு காய் அனைத்தையும் நன்றாக வசித்து விடுங்கள் இதுக்கு மத்து அல்லது மேஷர் இருந்தால் பயன்படுத்தி வசித்துக் கொள்ளுங்கள் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டாம் சாம்பார் ருசி மாறி விடும். இப்போது இந்த சாம்பாருக்கு ஒரு தாளிப்பை தயார் செய்து விடுவோம் அதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வெந்தயம், சேர்த்து புரிந்த பிறகு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பிறகு இந்த தாளிப்பை சாம்பாரில் ஊற்றி கலந்து விடுங்கள்.

இதையும் படிக்காலமே: பால் கொழுக்கட்டை செய்யப் போறீங்களா? அப்ப சத்தான இந்த காய வைத்து ஒருமுறை இப்படி பால் கொழுக்கட்டை செஞ்சு பாருங்க.

நல்ல கமகமவென்று வாசத்துடன் பீர்க்கங்காய் சாம்பார் தயாராகிவிட்டது இந்த சாம்பார் இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றுடன் வைத்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும் அதே நேரத்தில் இதை செய்வதும் மிக மிக சுலபம். அவசர நேரத்தில் கூட சட்டு என்று இந்த சாம்பாரை செய்துவிடலாம் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒருமுறை மறக்காமல் இதை செய்து பாருங்கள்.

- Advertisement -