பெண்களுக்கு இருக்கும் மன சங்கடத்தை தீர்க்கும் பரிகாரம்

god
- Advertisement -

பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த மாதவிடாய் பிரச்சனை. இறைவனால் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உடல் ரீதியான மாற்றங்கள் எதுவுமே சங்கடமான விஷயங்கள் கிடையாது. அதன் பெயர் தீட்டும் கிடையாது. ஆனால் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் நாட்களை நம்முடைய முன்னோர்கள் தீட்டு என்று சொல்லி வைத்து விட்டார்கள்.

அதற்கு காரணமும் நிறைய இருக்கிறது. அது நம்மில் பல பேருக்கு தெரியும். அதைப்பற்றி இப்போது நாம் பேசப்போவது கிடையாது. பெண்கள் ஏதோ ஒரு கோவில் இருக்கும் சமயத்தில் அங்கேயே மாதவிடாய் ஆகிவிட்டது. இப்படி தெரியாமல் தவறு நடந்து விட்டால் அதன் மூலம் பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஏதாவது நல்ல விசேஷங்களுக்கு செல்லும்போதும் இப்படிப்பட்ட பிரச்சனை பெண்களுக்கு வந்துவிடும்.

- Advertisement -

இதனால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா, இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் நிறைய பெண்களுடைய மனதில் இருக்கிறது. ஆனால் இதை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. இதற்கு உண்டான ஒரு தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஏதோ ஒரு கோவிலில் இருக்கீங்க அல்லது ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்கு போறீங்க இப்படி எதிர்பாராத சமயத்தில் அந்த இடத்தில் உங்களுக்கு மாதவிடாய் ஆகிவிட்டது. இதனால் கடவுள் உங்களை தண்டிக்க போவது கிடையாது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடாது. ஏனென்றால் கடவுள் தான் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை பெண்களுக்கு கொடுத்து இருக்கின்றான்.

- Advertisement -

ஆகவே இதற்காக ஒரு பெண்ணை அவன் எந்த நாளிலும் தண்டிக்க மாட்டான். ஆனால் இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு தோஷம் பெண்களை தாக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட என்ன செய்வது. கோவிலில் இதுபோல ஒரு சம்பவம் நடந்து விட்டது. கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துருங்க.

வீட்டுக்கு வந்து ஒரு டம்ளரில் காய்ச்சாத பசும் பாலை எடுத்து இந்த மண்ணை அதில் போட்டு விடவும். பிறகு அந்தப் பாலை மண்ணோடு சேர்த்து கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள் கண்ணுக்கு தெரியாத தோஷம் நீங்கிவிடும். பிறகு நீங்கள் வழக்கம் போல தலைக்கு குளித்துவிட்டு, உங்கள் வேலையை பார்க்கலாம். தீட்டுக்காலமெல்லாம் முடிந்த பிறகு, எந்த கோவிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததோ, அந்த கோவிலுக்கு சென்று உங்கள் கையால் அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பசும்பாலை வாங்கி கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு

பரிகாரம் அவ்வளவுதாங்க. இதனால் இனி இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையில் நடந்தால், பெண்கள் உங்களுக்குள்ளேயே போட்டு இந்த விஷயத்தை குழப்பிக் கொள்ள வேண்டாம். பிரச்சினைகளை மனதில் மேலும் மேலும் சேர்க்கும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். அது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் நன்றாக இருக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -