பெண்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறால் அவர்கள் வீட்டில் எத்தனை பூஜைகள் செய்தாலும் தெய்வம் தங்காமல், செல்வம் குறைவதோடு, பாவத்தையும் சேர்த்து விடும். பெண்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்.

- Advertisement -

ஒரு வீட்டின் தூண் போன்றவர்கள் பெண்கள் தான். ஆண்கள் எத்தனை தான் சம்பாதித்தாலும் எவ்வளவு சேர்த்தாலும் கூட அந்த வீட்டில் பெண்கள் சரியாக அதை பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் அந்த குடும்பமானது முன்னுக்கு வருவது என்பது கொஞ்சம் கடினம் தான். அப்பேற்பட்ட பெண்கள்தெரியாமல் ஒரு சில தவறுகளால் குடும்பம் என்றைக்குமே துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறது அது என்னவென்று தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒரு வீட்டில் பெண்களை எப்பொழுதுமே மகாலட்சுமியின் அம்சமாக தான் பார்க்கிறோம். மகாலட்சுமி என்பவள் செல்வத்திற்கே அதிபதி ஆனவள். அந்த ஒரு ஸ்தானத்தையே பெண்களுக்கு கொடுத்திருக்கிறோம் என்றால் அந்த பெண்கள் வீட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் ஒவ்வொரு செய்கையும் வீட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இத்தகைய அம்சங்கள் பொருந்திய பெண்கல் ஆனவர் வீட்டில் பொய் பேசி, போலித்தனமாக இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் தாண்டவம் ஆடும். அவர்கள் என்ன பூஜை செய்தாலும், எத்தனை கோவில் சென்றாலும் தெய்வங்கள் அந்த வீட்டில் குடியிருக்காது. ஏனென்றால் வார்த்தை, வாக்குகளை பொறுத்த வரையில் ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம். அதனால் தான் பெரும்பாலும் பெண்கள் வயிறெரிந்து ஒரு வார்த்தையோ, கோபப்பட்டு சாபமும் கொடுத்தால் அந்த குடும்பம் கண்டிப்பாக கஷ்டப்படும். அப்படி இருக்கும் போது தன் வீட்டிலேயே அந்த பெண்கள் இந்த தவறை செய்யும் போது குடும்பம் நிச்சயமாக கஷ்ட சூழ்நிலையில் தான் இருக்கும்.

உண்மையை பேசி போலித்தனம் இல்லாமல் இருக்கும் பெண்களிடம் எப்போதும் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும். இந்த பெண்கள் செய்யும் எந்த காரியமும் வெற்றி ஆகும். அதே போல் ஒரு சில பெண்கள் எத்தனை நன்றாக இருந்தாலும் கூட, மற்றவருடன் பேசும் ஒன்றுமே இல்லை என்று அழுது புலம்பி கொண்டு இருப்பார்கள் இது போன்ற செய்கைகளை பெண்கள் தங்கள் வீட்டில் அறவே செய்யக் கூடாது. அதற்காக ஆண்கள் பொய் பேசலாமா என்றால் அப்படி கிடையாது. ஒரு வார்த்தையை பெண்கள் சொல்வதற்கும், ஆண்கள் சொல்வதற்கும் வித்தியாசம் அதிகம். பெண்கள் ஒரு வார்த்தையை சொல்லும் போது அதற்கான வலிமையும் அதிகம். அதனால் தான் ஒரு வீட்டில் பெண்ணை தெய்வமாகவும், வீட்டில் மகாலட்சுமி ஆகவும் நினைக்கிறோம். அத்தகைய பெண்கள் பொய் பேசும் போது பாதிப்பு அதிகம் என்பதால் தான் பெண்கள் இதை செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

அதே போல் அவர்கள் வாயால் வீட்டில் பிள்ளைகளை சாபம் கொடுதுப்பது, வீட்டில் வருபவர்களை மனம் புண்படும்படி பேசுவது, இதையெல்லாம் விட முக்கியம் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடும் போது அவர்களை திட்டவோ, சபிக்கவும் கூடாது இது மிகப் பெரிய பாவத்தை நமக்கு சேர்த்து விடும்.

அதே போல வீட்டில் விளக்கு ஏற்றும் போது யாரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு சபித்து கொண்டு விளக்கு ஏற்றுக் கூடாது. சமையல் அறையில் நின்று சமைக்கும் போதும் இந்த விஷயத்தில் அதே கவனத்துடனே இருக்க வேண்டும். இப்படி அவர்கள் வாயில் இருந்து முடிந்த வரையில் எந்த வித அபச வார்த்தைகளோ, கெட்ட வார்த்தைகளோ வரவே கூடாது. அப்படி சபித்து கொண்டே இருக்கும் வீடுகளை நீங்கள் கொஞ்சம் கவனித்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் பணம் காசுடன் வாழ்ந்தால் கூட அந்த வீட்டில் நிம்மதி இருக்காது.

இதையும் படிக்கலாமே: இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நிறைய பணம் வரும். சீக்கிரம் சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.

பெண்கள் தெரியாமல் செய்யும் இந்த சின்ன தவறுகளை சரி செய்து விட்டால் போதும், அந்த குடும்பம் என்றென்றைக்கும் நல்ல நிலைமையில் அனைவரும் மதிக்கத்தக்க ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்பதில் எள் அளவு கூட சந்தேகம் கிடையாது. அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் சந்தோஷமாக குடியிருப்பாள்.

- Advertisement -