குடும்பம் சுபிட்சமாக இருப்பதற்கு பெண்கள் செய்ய வேண்டிய தானங்கள்.

thaanam
- Advertisement -

யாரொருவர் தங்களால் இயன்ற அளவு தான தர்மத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஆலயங்களில் அன்னதானம் என்ற ஒன்று நிகழ்கிறது. அன்னதானம் போல் இன்னும் பல தானங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் இன்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அதாவது குடும்பத் தலைவிகள் எந்த தானத்தை மேற்கொண்டால் அவர்களால் அவர்களின் குடும்பத்திற்கு நல்ல நிலைமை ஏற்படும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் இருக்கும் திருமணமான சுமங்கலி பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து, கையில் வளையல் போட்டு, பூ வைத்து எப்பொழுதும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் தான் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போல் வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்கள் தலைவிரி கோலமாகவோ அல்லது அழுது கொண்டு முகத்தை சிடுசிடு வென்றோ வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியில் சென்று விடுவாள் என்றும் கூறப்படுகிறது. ஆக ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய செல்வ செழிப்பிற்கும், முன்னேற்றத்திற்கும், மரியாதைக்கும் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய குடும்பத் தலைவிகளே காரணமாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத் தலைவிகள் செய்ய வேண்டிய தானத்தை பற்றி பார்ப்போம்.

முதலில் யார் ஒருவர் வீட்டிற்கு வருகிறார்களோ அவர்களுக்கு அருந்துவதற்கு தண்ணீரோ அல்லது மோரோ வழங்க வேண்டும். இதுவும் ஒரு வகையான தானம் தான். இவ்வாறு செய்வதன் மூலம் கெட்ட எண்ணத்தில் வரக்கூடிய நபர்களால் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.

- Advertisement -

அதேபோல் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அவர்களை மகாலட்சுமியாக பாவித்து அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் தர வேண்டும். இதுவும் ஒரு வகையான தானம் தான். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதத்தை பெற முடியும்.

மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டி கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வழங்குபவரின் சுமங்கலித்தன்மை பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. வசதியாக இருப்பவர்கள் ஏழை எளிய பெண்களின் திருமணத்தில் திருமாங்கல்யத்தை தானமாக தரலாம்.

- Advertisement -

பசித்த வயிறுடன் வருபவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு பொருளை சாப்பிட வழங்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த அன்னதானமாக கருதப்படுகிறது. பெண்கள் அன்னதானம் செய்வதன் மூலம் அவர்களின் கர்ம வினைகள் குறைவதோடு அவர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் கர்ம வினைகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கண்டிப்பான முறையில் வீட்டு வாசலில் காலையில் கோலம் போட வேண்டும். அவ்வாறு கோலம் போடும் பொழுது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். அப்படி செய்தால் அந்த பச்சரிசி மாவு எறும்புகள், சிறு குருவிகள், ஈக்கள் போன்றவற்றிற்கு உணவாக திகழும் என்பதால் இதுவும் ஒரு வகையான சிறந்த அன்னதானமாக கருதப்படுகிறது. இதனால் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு இலையை கல்லாப் பெட்டியில் போட்டு வைத்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகும்.

மேற் சொன்ன தானங்களை செய்யும் பொழுது பெண்கள் தங்கள் மனதார மன மகிழ்ச்சியுடன் செய்தால் அதனால் அவர்களுடைய குடும்பத்தினர் சகல சம்பத்துகளும் பெற்று நிறைவான ஒரு வாழ்க்கையை பெறுவார்கள்.

- Advertisement -