சுமங்கலி பெண்கள் வாங்க கூடாத தானம் எது? இந்த தானத்தை வாங்கினால் வரக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன?

thambulam
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பரிகாரங்கள் செய்வதும், தான தர்மங்கள் கொடுப்பதும், பெரிய அளவில் எல்லோராலும் பின்பற்றக் கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. திருமணம் நடக்கவில்லை. குழந்தை பாக்கியம் தள்ளிப் போகின்றது. ஜாதக கட்டத்தில் தோஷம் என்றால் உடனடியாக நாம் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு நாம் யாருக்கு தானம் கொடுக்கின்றோம் என்பதை கவனிக்க வேண்டும். மனிதர்களுக்கு இருக்கக்கூடிய தோஷத்தை போக்குவதற்கு நிறைய பரிகார ஸ்தலங்கள், நவகிரக ஸ்தலங்கள் எல்லாம் உள்ளது. அந்த இடத்திற்கு நாம் சாதாரணமாக இறைவழிபாடு செய்வதற்கு சென்றால் அங்கு பரிகாரம் செய்துவிட்டு, பரிகாரத்திற்காக கொடுக்கப்படும் தானத்தை சுமங்கலி பெண்கள் வாங்கலாமா கூடாதா என்பதை பற்றிய சந்தேகத்திற்கு உண்டான விடையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நாக தோஷம், நாக பிரதிஷ்டை செய்வது, திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க பரிகாரம் செய்வது, குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று அந்த தோஷத்தை கழிப்பதற்காக சில பேர் பரிகார ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வார்கள். இப்படி பரிகாரத்தை செய்துவிட்டு ஐந்து சுமங்கலி பெண்களுக்கு, ஏழு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் தானமாக கொடுக்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லி இருப்பார். இப்படிப்பட்ட தோஷங்களை கழிக்கும்போது தாம்பலத்தை தானமாக யாருக்கு கொடுக்க வேண்டும் தெரியுமா? வயதான சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது 50 வயதை கடந்த சுமங்கலி பெண்கள் இருப்பார்கள். பேரன் பேத்தி எடுத்த சுமங்கலி பெண்கள் இருப்பார்கள் அல்லவா. அப்படிப்பட்டவர்களுக்காக பார்த்து தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

புதியதாக திருமணமானவர்கள், திருமணம் ஆகி இன்னும் குழந்தை பேரு இல்லாதவர்கள், என்று சிறுவயதில் இருக்கக்கூடிய தம்பதியருக்கு சிறுவயதில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு இப்படிப்பட்ட தானத்தை செய்யவே கூடாது. பரிகார ஸ்தலங்களுக்கு செல்லும்போது நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யார் எதை கொடுத்தாலும் அதை கைநீட்டி வாங்குவது தவறு. அவர்கள் எதற்காக பரிகாரம் செய்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் விசாரித்து விட்டு அதன் பின்பு தானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

ராமேஸ்வரம், திருநள்ளாறு, காளஹஸ்தி போன்ற கோவிலில் எல்லாம் நிறைய பரிகாரங்கள் செய்யப்படும். அந்த இடங்களுக்கு நாம் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். மற்றபடி கோவிலில் இருந்து கொடுக்கக்கூடிய வெற்றிலை பாக்கு தாலி கயிறு போன்றவைகளை நாம் எந்த ஒரு பயமும் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை செய்து கொண்டு கொடுப்பார்கள் அல்லவா அந்த தானத்தை பெறுவதில் தவறு கிடையாது. சன்னிதானத்தின் சார்பாக செய்யக்கூடிய தானம் நமக்கு நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

தோஷ நிவர்த்தி செய்துவிட்டு கொடுக்கக்கூடிய வெற்றிலை பாக்கு மட்டும் கிடையாது. சில பேர் புடவை ரவிக்கை துணி இவைகளையும் தானமாக கொடுப்பார்கள். அதை வாங்கும் போதும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தானமும் கொடுக்க சொல்கிறீர்கள். தானமும் வாங்க கூடாது என்று சொல்லுகிறீர்கள். எதைத்தான் பின்பற்றுவது என்று சில பேருக்கு குழப்பம் இருக்கும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 40, 50 வருடமாக சுமங்கலி பெண்ணாக வாழக்கூடிய பெண்கள் இப்படிப்பட்ட தானத்தை பெறும் போது அவர்களுக்கு எந்த விதத்திலும் தோஷம் தாக்காது. ஆனால் இப்போதுதான் திருமணம் நடந்திருக்கு. இன்னும் குழந்தை கூட பிறக்கவில்லை என்பவர்கள் பரிகார தானங்களை பெறும்போது ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது சாஸ்திரம். நம்முடைய கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதும். அடுத்தவர்கள் எப்படி போனால் என்ன என்று யோசிக்காமல் பரிகாரம் செய்பவர்களும் தானத்தை கொடுக்கக் கூடாது. சிந்தித்து செயல்படுங்கள். நல்லது நினைத்து செய்யக்கூடிய பரிகாரம் தான் நல்லதை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -