பெண்கள் தப்பி தவறி கூட இந்த 5 விஷயங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்ல கூடாதுங்க. அது உங்களுக்கே திருப்பி பிரச்சினையாக வந்து முடியும்.

women3
- Advertisement -

பெண்கள் என்றால் சில விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி செய்யக்கூடாது என்ற வரையறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இதற்கு சட்டம் எல்லாம் தனியாக கிடையாது. அவரவர் வாழ்க்கையில் அனுபவ ரீதியாக அனுபவித்த விஷயங்களை, நமக்கு சொல்லிவிட்டு சென்று உள்ளார்கள். அதையெல்லாம் நாம் பின்பற்றினால் நம் குடும்பத்திற்கு நல்லது. அந்த வரிசையில் பெண்களுக்கு பிரச்சினையை தரக்கூடிய அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன. எவைகளை எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியே பகிர்ந்து கொள்ளக்கூடாது. தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறதா. வாங்க பார்க்கலாம்.

புதிய பொருட்கள் வாங்குவதை யாரிடமும் சொல்லக்கூடாது:
குண்டு ஊசி முதல் ஒரு பெரிய தங்கம் வாங்கினாலும் சரி, நீங்கள் எந்த பொருளை வாங்கப் போகிறீர்கள் என்பதை அந்த பொருள் வாங்குவதற்கு முன்பாக யாரிடமும் சொல்லவே கூடாது. சில பேர் சில விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்காக காசு சேர்த்து வைப்பார்கள். நான் இந்த பொருளை வாங்குவதற்காக காசு சேர்க்கிறேன். என்ற ரகசியத்தை கூட நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் நீங்கள் வாங்க நினைக்கும் பொருளை வாங்க முடியாமல் போகலாம். அப்படி புதியதாக வாங்கிய பொருள் அடுத்தவர்கள் கண் பட்டு பழுதடைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

வருமானத்தை பகிர்ந்து கொள்ளக் கூடாது:
எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப வருமானத்தை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு செலவு செய்வீர்கள், எவ்வளவு சேமிப்பில் வைப்பீர்கள் என்பதை மட்டும் யாரிடமும் சொல்லிடாதீங்க. அது உங்களுக்கு பெரிய ஆப்பு வைத்துவிடும்.

கருவுற்ற செய்தியை வெளியே சொல்லக்கூடாது:
பெண்களுக்கு இறைவன் கொடுத்த பெரிய பாக்கியம் தாய்மை. தாய்மை அடைந்து விட்டோம் என்ற செய்தியை மூன்று மாதம் கழித்துதான் வெளி ஆட்களுக்கு சொல்ல வேண்டும். சில பேர் ஐந்து மாதம் வரை கூட இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். நீங்கள் தாய்மை அடைந்த விஷயத்தை கணவர் உங்கள் தாய் தந்தை மாமனார் மாமியார் உடன்பிறந்தவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது தவறு கிடையாது.

- Advertisement -

அதிகம் பேசக்கூடாது:
பெண்கள் அனாவசியமாக எந்த விஷயத்தையும் எங்கேயும் அதிகமாக பேசக்கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நீங்கள் அதிகமாக பேச பேச பிரச்சனைகள் உங்களுக்கு தான் பெரியதாகும். ஆகவே அனாவசியமாக அதிகம் பேசுவதை பெண்கள் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம் வரும். முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: விதவிதமா குக்கர் வாங்கி சமைக்கிறது பெரிய விஷயம் இல்ல, ஒரு முறை வாங்குன குக்கரை பல வருஷத்துக்கு எப்படி பத்திரமா பாத்துக்குறோம் என்பது தான் முக்கியம். குக்கருக்கு அடிக்கடி செலவு பண்றது குறைக்கணும்னா இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.

கணவன் மனைவி சண்டை சச்சரவு அன்னியோன்யம்:
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவோடு இருந்தாலும் சரி, கணவன் மனைவி ஒற்றுமையாக சந்தோஷமாக அன்யூன்யமாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் சரி, இந்த இரண்டு விஷயத்தையும் வெளி ஆட்களுக்கு சொல்லக்கூடாது. குறிப்பா உங்களுக்குள் பிரச்சனை என்று வந்தால் உங்கள் அம்மா அப்பாவிடம் கூட போய் சொல்லாதீங்க. உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பயனுள்ள இந்த ஐந்து குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பற்றுங்கள். வாழ்வில் சந்தோஷம் என்றும் நிறைவாக இருக்கும்.

- Advertisement -