மிரளவைக்கும் முடி வளர்ச்சியை தூண்டும் மிளகு. போதும் போதும் என்று சொன்னாலும் முடி வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

hair3
- Advertisement -

இந்தக் குறிப்பை பின் பற்றி உங்களுக்கு முடி வளரத் தொடங்கி விட்டால் போதும். நீங்கள் வளரக்கூடிய முடியை வேண்டாம் என்று வெட்டி வெட்டி விட்டாலும், அது மீண்டும் மீண்டும் சீக்கிரத்தில் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படி ஒரு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சூப்பரான சிம்பிளான, பவர்ஃபுல்லான, குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமாக நமக்குக் கிடைக்கக்கூடிய மூன்று பொருட்களை வைத்து இந்த ஸ்ப்ரேவை நாம் தயார் செய்ய வேண்டும். நிறைய காசு செலவழிக்க வேண்டாம். கஷ்டப்பட்டு இந்த ஸ்பிரேவை தயார் செய்யவும் வேண்டாம். ஈஸியான மெத்தட். வாங்க நேரத்தைக் கடத்தாமல் குறிப்புக்குள் செல்வோம்.

இந்த ரெமிடிக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை அளவுகளோடு முதலில் பார்த்துவிடுவோம். கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், வெந்தயம் – 2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், அவ்வளவு தான். 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிக்கும் சொம்பு என்றால், 1 சொம்பு அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தயாராக வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி, மேலே சொன்ன மூன்று பொருட்களையும் போட்டு, 5 நிமிடங்கள் போல நன்றாக கொதிக்கவிடுங்கள். வெந்தயத்தில் இருக்கக்கூடிய சத்து, மிளகில் இருக்கக் கூடிய சத்து, கருஞ்சீரகத்தில் இருக்கக் கூடிய சத்து இந்த மூன்றும் அந்த தண்ணீரில் நன்றாக இறங்கட்டும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கொதிக்க வையுங்கள்.

ஒரு சொம்பு தண்ணீர் 1/2 சொம்பு தண்ணீர் அளவிற்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு மூடி போட்டு இதை அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியில் திப்பியை மட்டும் வடிகட்டி எடுத்து விட்டு, அந்த தண்ணீரை சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதை வெளியில் வைத்தாலே 5 நாட்கள் கெட்டுப்போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த ஸ்பிரே வை தலையில் எப்படி அப்ளை செய்வது. எந்த கண்டிஷனும் கிடையாது. தினமும் உங்களால் எப்போது முடியுமோ ஒரே ஒருமுறை இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான். உங்களுடைய ஸ்கால்ப்பில் ஏதாவது இன்ஃபெக்சன் மூலம் தலை முடி வளராமல் இருந்தால், பொடுகு தொல்லை பேன் தொல்லை அரிப்பு இப்படிப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை மிளகு சரிசெய்துவிடும்.

உடல் சூட்டை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய சக்தி வெந்தயத்தில் உள்ளது. உங்களுடைய முடியை கருகருவென காடு போல வளர்க்க கருஞ்சீரகம் தேவை. இந்த மூன்று பொருட்களை சேர்த்து முடிக்கு வலிமை கொடுங்கள். 30 நாட்கள் தொடர்ந்து இந்தப் ஸ்ப்ரேவை பயன்படுத்தி வரும் போது உங்களுடைய முடி உதிர்வில் வித்தியாசம் தெரியும். உங்களுடைய ஒவ்வொரு முடியும் தடிமனாகி இருப்பது, உங்களுக்கே தொட்டுப் பார்க்கும் போது தெரியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -