பெரிய வெங்காய கார சட்னி சுவையாக இப்படிக் கூட செய்யலாமே! நேரமும் அதிகம் எடுக்காது, சுவையும் சூப்பராக இருக்கும் தெரியுமா?

big-onion-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் பெரிய வெங்காய கார சட்னி அற்புதமான சுவை உள்ளதாக இருக்கும். பொதுவாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் சட்னி ருசியானதாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் பெரிய வெங்காயம் கொண்டு இப்படி ஒருமுறை சட்னி வச்சு பாருங்க, அதே அளவிற்கு ரொம்பவே பிரமாதமாக இருக்கும். விரைவாக செய்யக் கூடிய இந்த பெரிய வெங்காய சட்னி சுவையாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பெரிய வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 1, வர மிளகாய் 7, பூண்டு பற்கள் – 6, கருவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

பெரிய வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் நாலு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் பொடி பொடியாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய சைஸ் மீடியம் தக்காளி பழத்தை எடுத்து ஒன்றிரண்டாக மட்டும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வர மிளகாய்களை சேர்த்து லேசாக கருக விடாமல் வறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை கூட்டிக் குறைத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய் அதிகம் சேர்த்தால் வெங்காய சட்னி நன்றாக இருக்கும். வர மிளகாய்களை இப்போது எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே எண்ணெயில் வெட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் வெங்காயத் துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பின்பு, தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். தக்காளி சேர்த்த பின் அதிக நேரம் வதக்க கூடாது. எனவே சிறிது நேரம் வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்த்து இறக்கினால், ரொம்பவே சூப்பரான பெரிய வெங்காய கார சட்னி தயார்! இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -