பீர்க்கங்காயில் வேர்க்கடலை சேர்த்து இப்படி செஞ்சா வேற லெவல் டேஸ்ட் கிடைக்குங்க. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்தியாசமான கிரேவி.

perthangai-kuzhambu
- Advertisement -

இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயையும் வேர்க்கடலையையும் வைத்து இப்படி ஒரு கிரேவி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான கிரேவி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அதேபோல சில பேர் பீர்க்கங்காயை கூட்டு பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க. நீர் சத்து நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த ரெசிபிக்கு முதன்மை பொருளாக நாம் பயன்படுத்த போவது பீர்க்கங்காய், வேர்க்கடலை. அவ்வளவு தான். வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்க்கப் போவது கிடையாது. மீடியம் சைஸில் இருக்கும் இலசான – 2 பீர்க்கங்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். 2 கைப்பிடி – வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பீர்க்கங்காயை தோல் சீவி ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் தோலை உரித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொறகொறப்பாக அரைத்துக் கொள்ளலாம். 90% வேர்கடலை அரைபட்டால் போதும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். பச்சை வேர்கடலையாக இருந்தால் நன்றாக வறுத்து விட்டு ஆற வைத்து தோல் உரித்து பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பீர்க்கங்காய் கிரேவியை தாளித்து விடலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது கருகாமல் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி விடுங்கள். பிறகு வெட்டி வைத்திருக்கும் பீர்க்கங்காயை போட்டு எண்ணெயிலேயே வதக்கினால் பீர்க்கங்காய் 2 நிமிடத்தில் வெந்து கிடைத்து விடும்.

- Advertisement -

முக்கால் பாகம் பீர்க்கங்காய் வெந்து வந்தவுடன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து 30 செகண்ட் வரை இந்த எல்லா பொருட்களையும் எண்ணெயிலேயே நன்றாக கலந்து விட்டு உடனடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் வேர் கடலை பொடியை இதோடு சேர்த்து நன்றாக 1 நிமிடம் கலந்து விடுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

இதில் நாம் வேர்க்கடலை பொடி சேர்த்து இருப்பதால் தேங்காய் வெங்காயம் தக்காளி சேர்க்காமலேயே கிரேவி திக்காக கிடைத்துவிடும். உங்களுக்கு எந்த அளவுக்கு கிரேவி வேண்டுமோ அந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி கிரேவியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இப்போது கடாயில் இருக்கும் கிரேவியை ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு இரண்டு நிமிஷங்கள் வரை கொதிக்க விட்டால் எண்ணெய் நன்றாக பிரிந்து கொதித்து சூப்பரான கிரேவி தயாராக இருக்கும். அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தலையை தூவி பரிமாற வேண்டியதுதான்.

மொத்தமாக இந்த கிரேவியை செய்ய 10 நிமிடங்கள் கூட நமக்கு எடுக்காது. ஆனால் இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். வித்தியாசமாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் வாங்கினால் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -