தூய மனதோடு மாவை இடித்து இப்படி பெருமாளுக்கு விளக்கு போட்டால் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம் தெரியுமா? மாவிளக்கு போடும் முறை என்ன?

- Advertisement -

உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படுபவர் வேங்கட மலையில் வீற்றிருக்கும் பெருமாள் ஆவார். ஒருவருடைய வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படுவதற்கு பெருமாளை வழிபடுவது வழக்கம். பெருமாளை மனம் உருகி வழிபட்டால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இவருக்கு மாவிளக்கு போடுவது ஏன்? மாவிளக்கு போடுவதால் உண்டாக கூடிய பலன்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு உகந்ததாக இருக்கிறதோ அதே போல அடுத்தடுத்து வரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு ரொம்பவும் விசேஷமானதாக கொண்டாடப்படுகிறது. பாம்பை மலர் படுக்கையாக கொண்ட இந்த விஷ்ணு, பெருமாள் அவதாரம் எடுக்கும் பொழுது திருமணத்திற்கு நிறையவே குபேரனிடம் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை மட்டுமே கலியுகம் முழுவதும் கழிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -

அவருடைய இந்த வட்டியை கட்டுவதற்கு நாமும் நம்முடைய பங்களிப்பு கொடுத்தால் நம்மையும் செல்வந்தர் ஆக்கி அழகு பார்ப்பார் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை மட்டுமாவது பெருமாளுக்கு இவ்வாட்டியை கட்டுவதில் உபகாரம் செய்தால் அவருடைய வருமானம் ஆனது பன்மடங்கு பெருகும் என்பது நியதி.

இதனால் தான் பெருமாள் கோவில்களில் அதிகமாக சம்பாதித்த எல்லா பணத்தையும் கொண்டு போய் மொத்த மொத்தமாக கொட்டுகின்றனர். அதிலும் புரட்டாசி மாதத்தில் செலுத்தப்படும் காணிக்கையின் எண்ணிக்கை பெருமளவு உயர்வதற்கு காரணமும் இதுதான். புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு மாவிளக்கு போட்டு வீடு வீடாக சென்று யாசகம் கேட்டு அரிசியையும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

- Advertisement -

அதுபோல ஒவ்வொரு சனிக்கிழமைகளும் மாவிளக்கு போடுவதால் நம்முடைய வறுமை, குடும்பத்தில் இருக்கும் கஷ்ட நிலை மாறும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது எனவே சனிக்கிழமைகளில் பெருமாள் படத்தை வைத்து துளசி மாலை சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து பெருமாள் அஷ்டகம் வாசித்து மாவிளக்கு ஏற்ற வேண்டும். இதற்கு தூய மனதோடு நல்ல எண்ணத்தோடு அரிசியை ஊற வைத்து உலர்த்தி இடித்து மாவாக்க வேண்டும்.

பெருமாளுக்கு போடப்படும் இந்த மாவிளக்கு கைகளால் இடித்த மாவிலிருந்து செய்வது தான் உசிதமானது. கடையிலிருந்து மாவை வாங்கி வரக்கூடாது. உங்கள் கை பட அரிசியை இடித்து மாவாக்கி நன்கு சலித்து பின்னர் அந்த மாவினால் விளக்கு போல வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட வேண்டும். பின்னர் இந்த விளக்கினுள் சுத்தமான பசு நெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு, இரட்டை திரிகளாக இட்டு திரித்து தீபம் ஏற்றி மனதார நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர பெருமாளை நோக்கி வழிபட வேண்டும். மாவிளக்கானது நம்மை நோக்கி பார்த்தவாறு பெருமாள் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். பின்னர் துளசி தீர்த்தம், சர்க்கரை பொங்கல், உளுந்த வடை போன்றவற்றையும் படைத்து வழிபடலாம். இது போல ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தொடர்ந்து மாவிளக்கு ஏற்றி தீபம் ஏற்றி வந்தால் எவ்வளவு பெரிய கஷ்ட நிலையில் இருந்தும் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்.

- Advertisement -